பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் கொண்டுபோய் விடுகிறார்கள். ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வோர் இந்திரியத்திற்கு இன்பத்தைத் தேடி அதனால் நிறைவு பெறாமல் மேலும் தேடிக் கொண்டிருக்கிறது மனம். அப்படித் தேடுகின்ற இன்பமும் அடுத்த நாள் வரைக்கும் கூட இருப்பது இல்லை. ஒரு கணத்தில் மாயும் இன்பத்திற்கு வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவழிக்கும் இயல்பு அந்த மனத்திற்கு இருக்கிறது. சின்ன பூவில் உள்ள சிறிய தேனை உண்ணுகின்ற வண்டை நோக்கி, "நான் ஆனந்தமாகிய தேனைச் சொரியும் ஒரு மலரைச் சொல்கிறேன். அங்கே போய் நீ ஊதுவாயாக" என்று மணிவாசகர் சொல்கிறார். 'சிறகை அடித்துப் பறந்துபோய்க் கொஞ்சம் கொஞ்சம் தேன் தரும் பூவை நாடுவதை விட்டு அந்தத் தேனை நாடினால் அதைக் காணும்போது இன்பம் கிடைக்கும். அதைப் பற்றிப் பேசும் போது இன்பம் கிடைக்கும். நினைக்கும்போதே இன்பம் கிடைக்கும். எப்போதுமே அந்த தேனின் இன்பத்தைப் பெறலாம் என்று சொல்கிறார். மலரில் உள்ள தேன் உடம்புக்குள் மிக மெல்லிதாக இருக்கும் நாவின் துனியை மாத்திரம் சுவைக்கச் செய்யும். ஆனால் அம்பலத்தில் ஆடுகிற ஆண்டவனின் திருவடியாகிய மலரில் உள்ள தேன் உடம்புக்குள் மிக்க வலியனவாகிய எலும்புகள் முழுவதும் உள் நெகிழும்படி செய்யும். எலும்பை உருக்குகின்ற நோய் அன்று. புறத்தே தோன்றாத வகையில் உள்ளுக்குள்ளே உருகி இன்ப உணர்ச்சி பெறும்படியாக அந்தத் தேன் செய்யுமாம். மனத்தை வண்டாக வைத்து மணிவாசகர் பேசுகிறார். ஆனந்தத்தேன் சொரியும் குனிப்பு உடையான் என்று நடராஜப் பெருமானைச் சொல்கிறார். மலரில் உள்ள தேனை வண்டுகள் போய்க் கிண்டி உண்ணவேண்டும். இங்கேயோ தேன் உள்ள பூ ஆடிக் கொண்டிருக்கிறது. அதனால் ஆனந்தத் தேன் சொரிந்து கொண்டே இருக்கிறதாம். ஏதேனும் வண்டு வந்தால் இங்கே தேன் உண்டோ, இல்லையோ என்று ஐயம் அடையாமல், வருவதற்கு முன்னாலேயே தேன் தாரை ஒழுக வேண்டுமென்று கருதி மலர் ஆடிக் கொண்டிருப்பது போல, ஆண்டவன் தன் திருவடியை அசைத்து ஆடிக்கொண்டிருக்கிறான். உலகில் உள்ள சிற்றின்பத்தை நினைந்து தன் வாழ்க்கைத் தொழில் முழுவதையும் அதற்காக அமைத்துக் கொண்டு வாழும் 315