பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 முகம் என்று சொல்லிக் கொண்டு போனால் வெவ்வேறு கடவுள் என்பார்கள். இப்படிப் பலவகை உருவங்கள் இறைவனுக்கு இருப்பதாக அன்பர்கள் போற்றி வணங்கும்போது, இவற்றி னிடையே பொதுவாக உள்ளதைச் சொன்னால் எல்லாவற்றையும் சொன்னதாக ஆகிவிடும். பொதுமையில் அமைந்தது எது என்று வள்ளுவர் ஆராய்ந்தார். இந்தச் சங்கடத்தில் கடவுளுக்கு உருவமே இல்லை என்று சொல்லிவிடலாம் என்று தோன்றி இருக்கலாம். கண்ணும் ls) of மும் படைத்த மனிதன் வணங்குவதற்குப் பெயரும் உருவமும் அவசியம் வேண்டுமென்ற தத்துவம் தெரிந்தவர் அவர். கடவு ளுக்கு உருவம் உண்டு என்றும், அந்த உருவத்தை வணங்க வேண்டும் என்றும் சொல்ல எண்ணினார். எந்த உருவத்தைச் சொல்வது என்பதில்தான் சங்கடம் உண்டாயிற்று. பொதுவான அடிகள் முகமும் வடிவும் வெவ்வேறாக இருந்தாலும் எல்லா உருவங்களுக்கும் பொதுவாக இரண்டு அடிகள் இருக்கின்றன. முகம் எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றபடி கரங்கள் இருக்கும். நான்கு முகத்திற்கு எட்டுக் கரங்கள், ஆறுமுகத்திற்குப் பன்னிரண்டு கரங்கள், ஐந்து முகத்திற்குப் பத்துக் கரங்கள் என்ற வேறுபாடு உண்டு. இந்த வேறுபாடு அடிகளைப் பொறுத்த வரையில் இல்லை. முகமும், உடம்பும், திருத்தோள்களும் வெவ்வேறாக இருந்தாலும் இறைவனுடைய வடிவங்கள் எல்லாவற்றுக்கும் பொதுவாக அமைந்தவை இரண்டு திருவடிகள். வேடிக்கையாகக் குழந்தைகளுக்குச் சில கணக்குக் கேள்விகளைப் போடுவது பெரியவர்கள் வழக்கம். அப்படி ஒரு குழந்தையிடம் போய், "ஒரு முகத்திற்கு இரண்டு கை, இரண்டு கால்; ஆறு முகத்திற்கு எத்தனை கைகள், எத்தனை கால்கள்,' என்று கேட்க, அந்தக் குழந்தை யோசிக்காமல் விடை சொன்னால், 'பன்னிரண்டு கைகள், பன்னிரண்டு கால்கள் என்று சொல்லும். யோசித்துச் சொன்னால், 'பன்னிரண்டு கைகள், இரண்டு கால்கள் என்று சொல்லும். இங்கே பெருக்கல் வாய்பாட்டுக்கு வேலை இல்லை. எத்தனை முகங்களானாலும், எத்தனை கரங்களானாலும் அடிகள் மாத்திரம் இரண்டே. t 318