பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார்க்கு நல்ல பெருமாள் 'குழந்தைக் கடவுளை நம்புகிறவர்கள் இந்தப் பிரபஞ்சத் திற்கு வசப்பட மாட்டார்கள். முடிவில்லாத பிறவிக் கடலுக்குள் புகமாட்டார்கள். அவர்களுக்குப் பிறவி இல்லாத முக்தி கிடைக்கும். அது கிடக்கட்டும். மண்ணிலும் அவர்கள் நன்றாக வாழலாம். அவனை நம்புகிறவர்கள் மானம், குலம், கல்வி முதலிய எல்லாவற்றையும் கெடுக்கின்ற வறுமையில் சிக்கி விசனப்பட மாட்டார்கள்' என்று பேசுகிறார் அருணகிரியார். 'முருகன் திருநாமம் புகல்கின்றவர்கள் பிறவிக் கடலில் புகார், மிடியால் விதனப்படார் என்றால் என்ன பொருள்? இன்ப துன்ப மில்லாத முக்தி நிலை அடைவார்கள்; உடம்போடு வையத்தில் வாழும்போது வளவாழ்வு நிரம்பப் பெற்று ஒவ்வொரு நாளும் சுகமாகவே இருப்பார்கள் என்பதுதானே? எந்தக் காரியத்தைச் செய்யச் சொன்னாலும் பயன் என்ன என்று கேட்கிற காலம் இது. ஆகவே முடிவாகக் கிடைக்கும் பயனை முன்னாலே சொல்கிறார். முடியாப் பிறவிக் கடலில் புகார்; முழுதும் கெடுக்கும் மிடியால் படியில் விதனப் படார். திருநாமம் புகல்பவர் யார் முடியாப் பிறவிக் கடலில் புகமாட்டார்கள்? யார் முழுதும் கெடுக்கும் மிடியால் விதனப்பட மாட்டார்கள்? அடியார்க்கு நல்ல பெருமாள் திருநாமம் புகல்பவரே! 'சரி சரி, அவன் நாமத்தைப் புகல்பவர் பிறவித் துன்பத்திற்கு உள்ளாக மாட்டார்கள். தரித்திரத்திற்கு ஆளாக மாட்டார்கள் என்று சொல்கிறீரே. அதற்கு ஏதாவது அடையாளம் இருக்கிறதா?” என்று கேட்டால் அருணகிரியார் சொல்கிறார். - முருகன் பெருமை வெற்றி வேல்பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம்அடங்கப் பொடியாக்கிய பெருமாள். க.சொ.111-3 23