பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 'மற்ற எல்லாம் தெரிந்து கொண்ட மாதிரி உன்னை நீ தெரிந்து கொள்ளவில்லையே, கண்ணா யசோதையால் உன்னைக் கட்ட முடியாமல் போயிற்று என்பதை யோசித்து இப்படிப் பேசுகின் றாய் போலும்! நீ கண்ணனாக எழுந்தருளி இருக்கும் இந்த உருவம் மாத்திரம் அன்று. உன்னுடைய இயல்பான உருவத்தை யும் எனக்குக் காட்டு. நான் கட்டி விடுகிறேன்' என்றான். கண்ணன் சகாதேவனுடைய மன வலிமையைத் தெரிந்து கொள்ளும் பொருட்டுப் பல பல வடிவங்களைக் கொண்டு நின்றான். 'மாயவனும் அன்பன் மனமறிவான் கட்டுகளின் றாய வடிவுபதி னாறாயிரங்கொண்டான்.” கண்ணபிரான் பல பல உருவங்களிலும் தோற்றம் அளித்தான். சகாதேவன் அந்த வடிவங்களை எல்லாம் கண்டு, 'நாம் தெரியாமல் சொல்லிவிட்டோமே எப்படிக் கட்டுவது? என்று மயங்கவில்லை. சகாதேவன் செயல் ஆலமரம் நெடுந்துரம் தழைத்துப் பரவிக் கிளை விட்டிருந் தாலும் அதன் அடிமரத்தில் கோடரியால் போட்டால் மரமே பட்டுவிடும். அப்படி அத்தனை உருவங்களுக்கும் மூலமாக உள்ள தோற்றம் எது என்பதைச் சகாதேவன் நன்கு உணர்ந்தவன். அதுமாத்திரம் அன்று, எங்கே கட்ட வேண்டுமென்பதையும் தெரிந்து கொண்டிருந்தான். மூலமாகிய தோற்றத்தை உள்ளத்தில் வைத்து அந்தப் பெருமானுடைய திருவடிகளைத் தன்னுடைய கருத்தினால் பிணைத்துவிட்டான். 'தூயவனும் மூலமாந் தோற்றமுணர்ந் தெவ்வுலகும் தாய அடியிணைகள் தன்கருத்தி னாற்பிணித்தான்.” இப்போது கண்ணன் கட்டுண்டு கிடந்தான். மற்றப் பெரிய வர்களுடைய தந்திரத்தினாலே கட்டுப்படாத ஆண்டவன், யசோதை கட்டிய கயிற்றுக்கு அகப்படாத ஆயன், வேதங் களினாலும் சாஸ்திரங்களினாலும் காண முடியாத கண்ணன், இப்போது மிக எளிதில் சகாதேவனால் கட்டுண்டான். கண்ணனுக்கே வியப்பு உண்டாகிவிட்டது. நெடுநாள் காணமுடியாமல் கண்ட ஒருவர் தம்முடைய அன்பனை இறுக்கிப் பிணித்து அனைத்துக்கொண் 324