பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் டால் அந்த அணைப்பு ஒரு வகையில் இன்பமாக இருக்கும்; மற்றொரு வகையில் மூச்சுத் திணற அடிக்கும். இந்த நிலையில் கண்ணபிரான் இருந்தான். 'சகாதேவா, என்னை அன்பினாலே நன்கு அறிந்து எப்படிக் கட்டவேண்டுமென்ற உண்மையைத் தெரிந்து என்னுடைய காலைக் கட்டிவிட்டாயே! நீ கட்டினது மிகவும் நல்லது. நீ நல்லவன். நான் இப்போது அஸ்தினா புரத்திற்குத் தூது போக வேண்டும். கட்டின காலை விடு அப்பா' என்று கெஞ்சினான். 'அன்பாலின் றென்னை அறிந்தே பிணித்தமைநன் றென்பாதந் தன்னை இனிவிடுக என்றுஉரைப்ப.” அவன் பெற்ற வரம் சிகாதேவன் மிகச் சிறந்த தந்திரசாலி. கையிலே அகப்பட்டுக் கொண்ட பொருளைப் பயன்படுத்தாமல் விடுவானா? 'கண்ணா, இப்போது நீ எனக்கு ஒரு வரம் தரவேண்டும். பாரதப் போரில் எல்லோரையும் அழித்துப் பூபாரம் தீர்க்கத் திருவுள்ளம் கொண் டிருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். இப்போது நான் கேட்கும் வரம் ஒன்று உண்டு. உன் திருவுள்ளக் கருத்தில் சற்றே நெகிழ்ச்சி கொள்ள வேண்டும். உன்னையே சரண் என்று அடைந்திருக்கிற எங்கள் ஐந்து பேரை மாத்திரம் உன்னுடைய கடைக் கண்ணால் காப்பாற்றி அருளவேண்டும்' என்று வேண்டிக் கொண்டான். 'வன்பாரதப்போரில் வந்தடைந்தேம் ஐவரையும் நின்பார்வை யாற்காக்க வேண்டும் நெடுமாலே.' யாருக்கும் கட்டுப்படாத கண்ணபிரானை உள்ளத்தில் தோன்றிய மெய்யன்பினாலே பிணைத்து அவன் திருவடியைக் கட்டி, அந்தச் சமயத்தில் வரம் கேட்டு வாங்கிக் கொண்டான் சகாதேவன். பின்னால் கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் பதினெட்டு நாள் பெரிய போர் நடந்தது. மிகக் கடுமையாக நடந்த அந்தப் போரில் ஒவ்வொருவருடைய வீரமும் வெளியா யிற்று. போர் நடந்து அதில் அருச்சுனன் முதலியவர்கள் தம்முடைய வீரத்தை வெளிப்படுத்த, அதனால் பஞ்ச பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது என்றுதான் பாரதத்தைப் படிக்கையில் தோன்று கிறது. ஆனால் அந்தப் போர் நடப்பதற்கு முன்னாலேயே பாரதப் 325