பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் மாறவேண்டும். அதனை எண்ணியே புத்தி இறைவனுடைய திருவடியைச் சார்ந்து அன்பு மயமாக வேண்டுமென்று இந்தப் பாட்டில் சொல்கிறார். புத்தியை வாங்கி நின் பாதாம்புயத்திற் புகட்டி அன்பாய் முத்தியை வாங்க அறிகின்றிலேன். வெறும் அறிவினாலே இன்பத்தைப் பெற இயலாது. அதற்கு எல்லை உண்டு. இறைவனுடைய திருவடி ஒன்றுதான் நமக்குப் புகல் இடம் என்று அறிவினால் தெரிந்து, அதனைச் சார்ந்து பின்பு அங்கே ஒட்டிக் கொள்ளவேண்டும். சாரும் மட்டும் அறிவுக்கு வேலை உண்டு. ஒட்டிக் கொள்வதற்கு அன்பினால் தான் முடியும். இப்போது நம்முடைய அறிவு உலகிலுள்ள பொருள்களை ஆராய்ந்து அவற்றைச் சிறந்தனவாகக் கருதுகின்றது. பின்பு அவற்றோடு ஒட்டிக் கொள்கிறது. இது பற்றிய அறிவும் பற்றும் மேன்மேலும் பிறவியை எடுப்பதற்குக் காரணம் ஆகின்றன. அப்படியின்றி அந்த அறிவு வேறு எங்கெங்கோ போகும் போக்கை மாற்றி அதனை நம்முடைய கையில் வாங்கிக் கொண்டு இறை வனுடைய பாதாரவிந்தத்திலேயே செலுத்த வேண்டும். வேலின் பெருமை 'நான் புத்தியை அது போகும் போக்கிலிருந்தும் இழுத்து வாங்குவதற்குரிய வழியைத் தெரிந்து கொள்ளாமல் திண்டாடு கிறேன். தவறான காரியத்தைச் செய்கிறேன். இதனை மாற்ற வேண்டும். என்னால் மாற்ற முடியவில்லை. என்னைத் தண்டித்து ஆட்கொள்ள மாட்டாயா?" என்று முறையிடத் தொடங்கினார் அருணகிரிநாதர். 'தண்டிப்பதற்குரிய அருமையான வேல் உன் திருக்கரத்தில் இருக்கிறதே! அதைக் கொண்டு தண்டித்து என்னைத் திருத்த வேண்டும்” என்று முதலில் சொல்ல எண்ணினார். ஆனால் பிறகு அப்படிச் சொல்வது தவறு என்று தோன்றியது. 'உன்னுடைய வேல் மிகப் பெரிய தடையை நீக்குவதற்கு வேண்டும். அதைப் பிரயோகம் பண்ணுவதற்கு ஏற்ற தகுதி மிகப் பெரிய அசுரர் களுக்குத்தான் உண்டு. என் புத்தியைத் திருத்துவதென்று நீ நினைத்தால் மிக எளிதில் ஆகிவிடும். இதற்கு உன்னுடைய 329