பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை இந்த வாகனங்களைச் சுகமாக வாழ்வதற்கு வைத்திருந்த தோடு பிறருடைய நாட்டைப் பற்றிக் கொள்வதற்கும், தம்மேல் பகைவர்கள் படை எடுத்தால் எதிர்ப்பதற்கும் உரிய படை களாகவும் வைத்திருந்தார்கள். தேர், குதிரை, யானை, காலாட் படை என்னும் நான்கையும் சதுரங்க சேனை என்பார்கள். யானை முதலிய படைகள் யாரிடம் மிகுதியாக இருக்கின்றனவோ அவர்களைப் பெரிய அரசர்கள் என்று மக்கள் மதித்தார்கள். இன்று பணம் படைத்த மேலை நாடுகள் பணத்தைக் கொண்டு பலத்தை அதிகப்படுத்திக் கொள்வதைப் பார்க்கிறோம். பல பல புதிய படைக்கருவிகளைப் பெருக்கிக் கொள்கின்றனர். அந்தக் காலத்தில் தேர் முதலியவற்றைப் பெருக்கிக் கொண்டார்கள். இந்தக் காலத்தில் அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு முதலிய வற்றைப் பெருக்கிக் கொள்கிறார்கள். தம்மிடத்தில் உள்ள செல்வம் போதாது என்று பிறருடைய செல்வத்தை அடித்துக் கொள்ளும் பொருட்டுப் படைகளை மிகுதியாக்குவது ஆசை உடையவர்களுடைய செயல். பிற நாடுகளையும் வென்று அவற் றுக்கும் தாம் தலைவராக வேண்டுமென்று மன்னர்கள் நினைத் தார்கள். படை பெருகுவதற்குக் காரணம் இந்தப் பேராசையே. வேறு ஒருவன் தன் நாட்டைக் கைக்கொள்வான் என்ற பயத்திலும் படையைப் பெருக்கிக் கொள்வது உண்டு. இவ்வாறு இரு திறத்தாலும் படைகள் மிகுதியாயின. படையைப் பெருக்குதல் உலகைத் தம் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப் பெரிய வல்லரசுகள் போட்டி போட்டுக் கொண்டு அணுகுண்டுகளையும், பிற விஞ்ஞான அற்புத விளைவான படைக்கலன்களையும் உற்பத்தி செய்கின்றன, இந்தக் காலத்தில். பழங்காலத்தில் தேர், கரி, பரி ஆகியவற்றை மிகுதியாகச் சேர்த்துக் கொண்டார்கள். சேர்த்துக் கொண்டு வாழ்ந்தார்கள் என்று சொல்லலாமா? அவர்கள் மனத்தில் அமைதி இராமல் இருந்தது. இன்று அமெரிக்காவும், ரஷ்யாவும் படைக்கலங்களைப் பெருக்கிக் கொண்டதனால் ஒரு கணமும் அமைதியில்லாமல் வாழ்கின்றன. அவர்களுடைய உள்ளத் தில் மனக்கலக்கம் எழுந்திருக்கிறது. இதைத்தான் 'கெடுபிடி யுத்தம் (Cold War) என்று சொல்கிறார்கள். 339