பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 விடும் என்று அறியாமல, நாம் அவர்களைப் போல ஆக வேண்டுமென்று நீண்டு கொண்டிருக்கிறது. இது புண்ணியமான காரியமா? இந்த நெஞ்சம் நெடு நெஞ்சம்; பாவி நெடு நெஞ்சம். ஆதலால் இதைப் பார்த்து, பாவி நெடு நெஞ்சமே! என்று அருணகிரியார் சொல்கிறார். அறியாத நெஞ்சம் ாம் சொல்லவேண்டியதை அவர் சொல்கிறார். பொருட் செல்வத்தை ஈட்டிக் கொள்வதில் நோக்கம் வைத்து நாள்தோறும் எட்ட முடியாததை எட்டிப் பிடிக்கத் தாவுகிறது இந்த நெஞ்சம். எதைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதைத் தெரிந்து கொள் வது இல்லை. நமக்கு வேண்டாதவற்றை எல்லாம், நம்முடைய துன்பத்தை மிகுதியாக்கக் காரணமானவற்றை எல்லாம் தெரிந்து கொண்டிருக்கிறது. எது உயிருக்கு இன்பத்தை அளிக்கிறது? அமைதியைத் தருகிறது?’ என்று தெரிந்து கொள்வது இல்லை. அமைதியைக் குலைப்பதற்குக் காரணமான பொருள் முதலிய வற்றையே நாடி நாடி அலைந்து ஏங்கி நிற்கிறது. தண்டு தாவடி போய்த் தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம் நீரில் பொறிஎன்று அறியாத பாவி நெடுநெஞ்சமே! தண்டு என்பது சேனை. தாவடி போதல் - காலை வீசி நடத்தல்; தாவித் தாவிச் செல்லுதல். வீரர்கள் போர்க்களத்தில் நடக்கும் நடையைத் தாவடி போதல் என்று சொல்வார்கள். அடி வைத்துத் தாவிச் செல்பவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். நீரில் பொறி - நீரில் எழுதும் எழுத்து. தேர், யானை, குதிரை ஆகிய படைகளோடு சண்டைக்குப் போய்த் திரிகின்ற அரசர்களுடைய செல்வம் எல்லாம் நீரில் எழுதிய எழுத்துப் போன்றவை என்பதை அறியாத பாவி நெடு நெஞ்சம் நம் நெஞ்சம். அமைதி தரும் செல்வம் அவை உண்மையான செல்வமாக இருந்தால் மனத்திற்கு அமைதியும், மகிழ்ச்சியும் கொடுக்க வேண்டும். நன்றாக வாழ் 342