பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார்க்கு நல்ல பெருமாள் வேலாக ஏந்தி இருக்கிற அவன் திருவுருவத்தைப் பார்த்தே அவனை அடையாளம் கண்டு கொள்ளலாம். அடியார்க்கு நல்ல பெருமாள் "சரி, நீங்கள் சொல்கிறதைப் பார்த்தால் அவன் மிகப் பெரிய வனாக இருப்பானென்று தோன்றுகிறதே. அவனை அடையாளம் கண்டு கொண்டு நான் போனால் அவன் எனக்கு உதவி செய் வானா? எளிதிலே அவனைப் பார்க்க முடியுமா?" என்று சந்தேகப் பிராணி கேட்கிறான். அருணகிரியார் என்ன சொல்கிறார்? அடியார்க்கு நல்ல பெருமாள். அவனைக் காண முடியுமோ என்று அஞ்ச வேண்டாம். அவன் மிகவும் நல்லவன். அடியார்களுக்கு, தன்னை அண்டியவர்களுக்கு, மிகவும் நல்லவன்; அடியார்க்கு நல்ல பெருமாள், அடியார் களைக் காப்பாற்றுவது ஒன்றையே தன் வேலையாகக் கொண்டு வெற்றிவேலைத் தாங்கி நிற்கிறான். செருக்கை ஒழித்து, தலையைத் தாழ்த்தி, அகங்கார மமகாரம் குறைந்து, அவன் திருவடியில் தொழுது அழுது நின்றால் அவர்களுக்கு அவன் மிகவும் நல்ல பெருமாளாக இருப்பான். அவுணரை அழித்தவன் அகங்கார மமகாரத்தால் தலை தருக்கி நின்று, தம்மைவிட உயர்ந்தவர்கள் இல்லை என்று எண்ணி இறுமாந்து, நல்லவர் களுக்குத் துன்பம் இழைக்கிறவர்களுக்கு அவன் பொல்லாத வனாக இருப்பான். இதை விளக்க ஒரு நிகழ்ச்சியைச் சொன்னால் போதும். சூரபன்மன் முதலிய அசுரர்கள் தம்மைவிட உயர்ந்தவர்கள் இல்லை என்ற செருக்கால் தங்கள் தங்கள் தொழிலை இறைவன் ஆணைவழி நின்று நடத்தி வந்த தேவர்களுக்குச் சொல்லொணாத துன்பங்களை இழைத்தார்கள். ஓர் அசுரனா? இரண்டு அசுரரா? பெரிய அசுரக்கூட்டம். அக்கூட்டத்தை எம்பெருமான் என்ன செய்தான் தெரியுமா? அவுணர் குலம் அடங்கப் பொடிஆக்கிய பெருமாள். அவுணர் - அசுரர்கள். அவர்களுடைய குலமே அடங்க அழிந்து போகும்படியாக அவர்களை எல்லாம் பொடி பொடியாகச் 25