பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை கண்டு மயங்கி அவர்களைப் போல நாமும் இருக்க வேண்டு மென்று ஒவ்வொரு கணமும் கவலைப்பட்டு, முயற்சி பண்ணி, அது பலித்தால் மேலும் செல்வத்தை ஈட்டவேண்டுமென்று நினைத்து, ஐயோ ஆசை நிறைவேறவில்லையே என்று துன்புற்று வாழ்கிற வாழ்க்கையைப் போன்ற அவலம் வேறு இல்லை. இந்த அவல வாழ்க்கையில் பற்றுக் கொண்டவர்களுக்குத் திடீ ரென்று இறைவன் சார்பு கிடைத்துவிடாது. ஆனால் தொண்டர் களுடைய குழாத்தில் சேர்ந்து கொண்டார்களானால் அவர் களுடைய சேர்க்கைச் சிறப்பால் தெளிவு பெறுவார்கள். மெல்ல மெல்லச் செல்வத்தின்பாலும், செல்வர்களின்பாலும் உள்ள பற்று நழுவிவிடும். இறைவன் திருவருள் இன்பம் ஏறும். இறைவன் நமக்கு நேரே இன்பத்தைத் தருவதைக் காட்டிலும் தன் தொண்டர்கள் மூலமாகத் தருகிற இன்பம் பெரிது. காவேரி நீர் நேரே பாயாது; கால்வாய் மூலமாகவும், மடையின் மூலமாகவும் பாய்ந்தால்தான் வயல்களுக்குப் பயன் உண்டே அன்றி நேரே பாய்ந்தால் தாங்குவதற்கு ஆற்றல் இல்லை. அப்படி, தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெறும்படியாகச் செய்கிறவர்கள் தொண் டர்கள். இறைவனைக் காட்டிலும் தொண்டர்கள் மிக்க பயனைத் தருவார்கள். அவனைவிடத் தொண்டர்கள் பெரியவர்கள். இதனை ஒளவைப் பிராட்டி சொல்கிறாள். ஒளவை வாக்கு நாம் வாழ்கிற இந்த உலகம் மிகப் பெரியது. பெரிய பொருளுக்கு உவமை சொல்ல வேண்டுமானால் இந்த நிலத்தைச் சொல்வார்கள். 'நிலத்தினும் பெரிதே' என்பது குறுந்தொகைப் பாட்டு. இவ்வளவு பரப்பும், விரிவும் உடைய இந்த நிலம் நாம் கண்ட பொருள்களுக்குள் பெரியது. ஆனால் இதனைப் படைத்த நான்முகன் இதைவிடப் பெரிய வனாக இருக்க வேண்டும். புவனம் பெரியதானால் இதைப் படைத்த பிரமன் இதைவிடப் பெரியவன். அந்த நான்முகனும் வேறு ஒருவனுடைய படைப்பு. கரிய திருமாலின் உந்திப் பூவிலே தோன்றியவன் அவன். ஆகவே அந்த நான்முகனைக் காட்டிலும் கரிய திருமால் பெரியவன். அவ்வளவு பெரிய 345