பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 வனாகிய திருமால் பாற்கடலில் துயில் கொள்கிறான். ஆகையால் அவனைக் காட்டிலும் பாற்கடல் பெரியது. கடல் பெரிதாக இருந்தாலும் அகத்திய முனிவர் அந்தக் கடலைத் தம்முடைய கையில் எடுத்து ஆசமணியம் பண்ணிவிட்டார். எனவே கடலை விடக் குறுமுனி பெரியவர். அவர் கலசத்தில் பிறந்தவர். அதனால் குடமுனி என்ற பெயரைப் பெற்றார். ஆகையால் குறுமுனியைவிடக் குடம் பெரியது என்று சொல்ல வேண்டும். அந்தக் கலசமோ மண்ணால் ஆனது. கலசத்தின் தாயாகிய மண் மிகப் பெரியது. அந்த மண்ணோ ஆதிசேடனுக்கு ஒரு தலைச் சுமையாக இருக்கிறது. ஆகவே மண்ணைச் சுமக்கும் ஆதிசேடன் பின்னும் பெரியவன். அந்த ஆதிசேடனை எம் பெருமாட்டி உமாதேவி தன் சிறுவிரலில் மோதிரமாகப் பூட்டிக் கொண்டிருக் கிறாள். அந்தப் பெருமாட்டி பின்னும் பெரியவள். அந்தப் பெரு மாட்டியைத் தன்னுடைய ஒரு பாகத்தில் அடக்கிக் கொண் டிருக்கிற பரமேசுவரன் எல்லோரையும்விடப் பெரியவன். அவ்வளவு பெரியவனைத் தொண்டர்கள் தம்முடைய உள்ளக் கமலத்திற்குள் அடக்கி வைத்திருக்கிறார்கள். ஆகையால் தொண்டர்களுடைய பெருமை மிக மிகப் பெரிது. அது சொல்வதற்கு அரிது. - இந்தக் கருத்தை ஒளவை சொல்கிறாள். முருகப் பெருமான் எது பெரியது என்று கேட்டபோது, 'தொண்டர்களுடைய பெருமை பெரியது: என்பதை அந்தப் பாட்டி சொல்லப் புகுந்தாள். சும்மா பெரியது என்று சொன்னால் அதன் அளவு புலப்படாது என்று கருதி, புவனத்தில் இருந்து தொடங்கி மெல்ல மெல்லப் படியேறிக் கோபுரத்தின் உச்சியில் நின்று தொண்டர்களுடைய பெருமை மிகப் பெரிது என்று சொல்பவளைப்போல அடுக்கிக் கொண்டு போகிறாள். 'பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்! பெரிது பெரிது புவனம் பெரிது; புவனமோ நான்முகன் படைப்பு: நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்; கரிய மாலோ அலைகடல் துயின்றோன்; அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்; குறுமுனி யோகல சத்திற் பிறந்தோன்; கலசமோ புவியிற் சிறுமண் 346