பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 கூட்டத்திற்கு நடுவிலே புதிதாக ஒரு புராணம் தோன்றியது. அந்தப் புராணம் தோன்றுவதற்கு முன்னாலே மற்றப் புராணங்கள் எல்லாம் சிறந்தனவாக, பெரிய புராணங்களாக இருந்தன. இந்தப் புதிய புராணம் தோன்றிய பிறகு அவைகள் எல்லாம் சிறியவை ஆகி விட்டன. ஏன்? புதிதாக வந்த புராணம் பெரியபுராணம் என்ற பெருங்கீர்த்தியைப் பெற்றது. ஒன்று பெரியதானால் அது அல்லாத மற்றவை சிறியனவாகத்தான் இருக்கவேண்டும். 'ஒரு வெளியில் பையன்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப் போது ஒரு பெரிய பையன் வந்தான்' என்று சொன்னால் புதிதாக வந்து சேர்ந்த பெரிய பையன் மற்ற எல்லாப் பையன்களையும் சிறியவர்களாக்கி விட்டான் என்பது விளங்குகிறது அல்லவா? அப்படியே முன்னால் இறைவனைப் பற்றிய புராணங்கள் பெரியனவாக இருந்தன. பெரிய புராணம் வந்த பிறகு அவை சிறிய புராணங்கள் ஆயின. பெரிய புராணம் யாரைப் பற்றிச் சொல்வது? அது தொண்டர்களைப் பற்றிச் சொல்கிற புராணம். அதற்கு அதனுடைய ஆசிரியராகிய சேக்கிழார் சுவாமிகள் வைத்த பெயர் திருத்தொண்டர் புராணம் என்பதுதான். தொண்டர்களுடைய பெருமையைச் சொல்கிற அந்தப் புராணம் பெரிய புராணம் ஆகி விட்டது. காரணம்: அந்தப் புராணத்தில் வருகிறவர்கள் யாவரும் இறைவனைக் காட்டிலும் பெரியவர்கள். அடியார்க்கு எளியன் இறைவனைக் காட்டிலும் அடியார்கள் பெரியவர்கள் என்று நாம் சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. தொண்டர்களால் சிறியவன் ஆகிவிட்ட ஆண்டவனே தான் அடியார்களினும் எளியவன் என்று சொல்லிக் கொள்கிறான். பெற்றான் சாம்பான் என்ற ஹரிஜன் ஒருவன் இறைவனிடத்தில் மிக்க பக்தி செய்து வாழ்ந்து வந்தான். அவனுக்குத் திருவருள் செய்ய வேண்டு மென்று இறைவன் நினைத்தான். எதையும் மரபோடு செய்ய வேண்டும். நல்ல குருநாதன் மூலமாக அவனுக்கு நற்கதி கொடுக்க வேண்டும் என்று இறைவன் நினைத்தான். சிவ தீட்சை பெற்றுக் கொண்ட பிறகு அவனை ஆட்கொள்ள வேண்டும் என்பது இறைவன் திருவுள்ளம். உமாபதி சிவாசாரியார் என்று ஒருவர் இருந்தார். அந்தப் பெரியாரிடத்தில் பெற்றான் சாம்பான் 343