பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை திட்சை பெற்றுக் கொள்வது நல்லது என்று இறைவன் எண்ணி னான். அதனால் இவனுக்குத் தீட்சை செய்ய வேண்டு மென்று அந்தச் சிவாசாரியாருக்கு ஒரு வேண்டுகோளை இறைவனே விடுத்தான். அது ஒரு பாட்டாக இருக்கிறது. 'அடியார்க் கெளியன்சிற் றம்பலவன் கொற்றங் குடியார்க் கெழுதியகைச் சீட்டு - படியின்மிசைப் பெற்றான்சாம் பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து முத்தி கொடுக்க முறை' என்ற பாடலை எழுதிய ஒலையைப் பெற்றான் சாம்பான் மூலமாக அனுப்பினான். உமாபதி சிவாசாரியார் அவனுக்குத் தீட்சை செய்தார் என்பது வரலாறு. நாம் யாருக்கேனும் கடிதம் எழுதினால் இன்னார் எழுதுவது என்று சொல்லிக் கொள்கிறோம். கடிதத்தின் தலைப்பில் நம்முடைய பட்டங்களை எல்லாம் போட்டு நம் விலாசத்தை அச்சிட்டு வைத்துக் கொள்கிறோம். அப்படி இறைவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். இறைவனுக்கு எத்தனையோ விலாசங்கள் உண்டு. அவன் பெருமைகள் அளவிடற்கரியன. அவற்றுள் அவனாக விரும்புவது எது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது. அந்தப் பெருமானே தன்னுடைய கடிதத்தில் தான் விரும்பிய ஒரு விலாசத்தைப் போட்டுக் கொண்டான். இந்தப் பாட்டில் அது தெளிவாகிறது. அவன் தனக்குத் தானே கொடுத்துக் கொண்ட பட்டம், "அடியார்க்கு எளியன்” என்பது. இறைவனே அடியார்க்கு எளியன் என்றால் அடியார் அவனிலும் பெரியவர்கள் என்றுதானே கொள்ளவேண்டும்? பெரியபுராணத்தில் வரும் தொண்டர்கள் பெரியவர்கள். இறைவனைக் காட்டிலும் அவர்கள் பெரியவர்கள் என்பதைத் திருக்கூட்டச் சிறப்பு என்னும் பகுதியில் குறிப்பாகச் சேக்கிழார் புலப்படுத்துகிறார். அதை இங்கே சற்று ஆராய்வது உபயோகமாக இருக்கும். - பெரியோர் ຫົàrar குழந்தைக்கு ஒழுக்கத்தை ஊட்ட வந்த ஒளவை சிறியவர் யார், பெரியவர் யார் என்பதைச் சொல்கிறார். மேல் 349