பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 சாதி, கீழ்சாதி என்று வேறு பிரிப்பதை அவள் சொல்லவில்லை. ஆயினும் இரண்டு சாதிகளைச் சொல்கிறாள். ஆண் சாதி, பெண் சாதி என்பதையும் அவர் சொல்லவில்லை. 'சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர், பட்டாங்கில் உள்ள படி' இந்த உலகத்தில் தம்மிடம் உள்ள பொருளை யார் பிறருக்குக் கொடுக்கிறார்களோ அவர்களே பெரியவர்கள்; அப்படிக் கொடுக்கா மல் இருக்கிறவர்கள் சிறியவர்கள் என்று அந்தப் பாட்டி சொல்கிறாள். தமிழ்நாட்டில் ஈகையின் பெருமையைப் பல புலவர்கள் மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். திருவள்ளுவர் அதை மிகச் சிறப்பித்துப் பேசுகின்றார். ஈபவனுக்கு வாங்கு கிறவன் இருந்தால்தான் பெருமை. ஈதலினால் ஒருவனுக்கு இன்பம் வரவேண்டுமானால் அவனிடத்தில் ஏற்றுக் கொள்வான் ஒருவன் இருக்க வேண்டும். ஆகையால் ஒரு வகையில் பார்த் தால் ஈதலும் ஏற்றலும் ஒன்றாகவே நிகழ்வன என்று தெரியும். ஈதலும் இரத்தலும் புறநானூற்றில் ஒர் இடத்தில் ஈதலையும் இரத்தலையும் பற்றி ஒரு புலவர் பேசுகிறார். இழிந்ததிலும் இழிந்தது இன்னது, உயர்ந்ததிலும் உயர்ந்தது இன்னது என்கிறார். நமக்கு இறைவன் உடம்பையும், அறிவையும், பிற வசதியையும் கொடுத்திருப் பதால் அவற்றைப் பயன்படுத்தி முயற்சி செய்து நல்ல வகையில் வாழவேண்டும். அப்படியின்றி முயற்சி செய்யாமல் சோம்பேறி யாகத் திரிந்து, பொருள் ஈட்டாமல் பிறரிடத்தில் சென்று பல்லைக் காட்டிக் கொண்டு ஈ என்று சொல்லுதல் மிகவும் இழிந்த செயல். 'ஈயென இரத்தல் இழிந்தன்று.” அப்படி ஒருவன் மானத்தை விட்டுப் பிறர் இழிவுபடுத்துவதற் குரிய நிலையில் பல்லைக் காட்டி இரக்கும்போது செல்வம் உள்ளவன் ஈதலே முறை. அப்படியின்றி இல்லை என்று சொல் 35C.