பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 வேண்டும். ஆகையால் கொள் என்பதற்கு எதிரே கொள்ளேன் என்று சொல்வது மிகச் சிறந்த பண்பு என்று புலவர் சொன்னார். தொண்டர் பெரியர் இனித் தொண்டர்களைக் கவனிக்கலாம். அவர்களுக்கு அருட்செல்வம் நிரம்பியிருக்கிறது. பொருட் செல்வத்தை உடை யவர்கள் பிறருக்கு ஈந்தாலும் தமக்கே செலவழித்துக் கொண் டாலும் அந்தச் செல்வம் குறைந்துவிடும். மேலும் ஈட்டி நிரப்பிக் கொள்வார்கள். லாபநஷ்டக் கணக்குப் பார்ப்பதற்குரியது அவர் களிடத்திலுள்ள செவ்வம். ஆனால் தொண்டர்களுடைய அருட் செல்வத்திற்குக் கேடு இல்லை; ஆக்கம் ஆகிய வருமானமும் இல்லை. அவர்கள் லாபநஷ்டம் இல்லாத செல்வர்கள். 'கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்' அருட் செல்வத்தினால் வரும் பாக்கியம் அது. அதனைப் பெற்ற தொண்டர்களிடத்தில் ஒரு பெரிய சக்கரவர்த்தி நேரில் நின்று, 'உமக்கு வேண்டுவனவற்றைக் கேளும். தருகிறேன். பொன் வேண்டுமா? அரசு வேண்டுமா?’ என்று சொன்னால் அவர்கள் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். திருநாவுக்கரசர் உழவாரத் திருப்பணி செய்யும்போது பொன் னும் மணியும் அங்கே கிடந்தன. அவற்றையெல்லாம் கல்லை யும் மண்ணையும் போல அவர் ஒதுக்கிவிட்டார். இந்த உலகச் செல்வம் தொண்டர்களுக்குக் கவர்ச்சியைத் தருவது இல்லை. ஆதலின் பொருளாளன் ஒருவன் எத்தனை மிகுதியான பொருளை அவர்களுக்குக் கொடுக்க முற்பட்டாலும் அவர்கள் சற்றும் ஆசைப்படமாட்டார்கள். இது கிடக்கட்டும். அவர்கள் பிறவாமையில்லா முத்தியை அடையவேண்டுமென்ற முயற்சியில் ஈடுபடுகிறவர்கள் ஆயிற்றே: அந்தத் தொண்டர்களிடத்தில் பரமேசுவரனே எதிரில் வந்து, 'இந்தா, மோட்சத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த உலகத் தில் ஏன் இருக்கிறீர்கள்?' என்று சொன்னால், மிகவும் அரிதிற் பெறுவதற்குரிய அந்த மோட்சமாகிய செல்வமும் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்களாம். 'நாங்கள் எப்போதும் உன் னுடைய திருவடியைக் கும்பிட்டுக் கொண்டு அதனால் வருகின்ற 352