பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 சிதைத்த பெருமாள் அவன். அவுணர், உலகத்திற்குத் துன்பத்தைத் தருகின்ற இருட்படைக் கூட்டம். ஞானச் சுடரொளி வீசும் வேலையுடைய பெருமாளிடம் அவர்கள் ஆற்றல் சாயுமா? மாயையின் பிள்ளையாகிய சூரன் ஞானவேல் பட்ட மாத்திரத் தில் அழியாமல் எப்படி இருக்க முடியும்? அவன் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பயலையும் முருகன் விட்டு வைக்கவில்லை; முழுமையும் அழித்துவிட்டான். அவனைத் துணை என்று நாம் நம்பிவிட்டால் உலக மாயையின் வயப்பட்டுத் துன்பப்பட வேண்டாம். முடிவில்லாப் பிறப்பை இனிப் பெற வேண்டாத நிலையை அடையலாம். முடிவில்லாப் பிறப்பை ஒழித்து, வைய வாழ்வில் எல்லா விதமான வளத்தையும் அளிக்கின்ற பெருமாளுக்கு மூன்று அடையாளங்களைச் சொன்னார். அவன் வெற்றி வேலை உடைய பெருமாள்; அடியார்க்கு நல்ல பெருமாள்; அவுணர் குலம் அடங்கப் பொடியாக்கிய பெருமாள் என்றார். முருகன் இயல்பாக இருக்கும் நிலை வெற்றி வேலை உடையவனாக இருப்பது. அவன் சிஷ்ட பரிபாலனம் செய்கின்ற நிலை அடியார்க்கு நல்ல பெருமாளாக இருப்பது. அவன் துஷ்ட நிக்கிரகம் பண்ணுகிற நிலை அவுணர் குலம் அடங்கப் பொடியாக்கிய பெருமாளாக இருப்பது. இறைவன் தன்னுடைய இயல்பான நிலையில் இருந்தபடியே நல்லவர்களுக்கு அருள் செய்கிறான்; அல்லாதவர்களுக்குத் தீங்கு செய்கிறான். அசுரர்களுக்குத் துன்பத்தை விளைவித்து, அடியார் களுக்கு இன்பத்தை அளிக்கிறான். வெற்றிவேல் பெருமாளின் திருக்கோலத்தைப் பார்க்கும் போதே அவனுடைய கருணை புலனாகிறது; வீரம் தெரிகிறது. அடியார்களுக்கு இன்பத்தை அளிக்கவும் அல்லாதார்களுக்குத் துன்பத்தை விளைவிக்கவும் காரணமாக இருப்பவை அவனது கருணையும் வீரமும். வீரச் செயலாலே துன்பத்தை ஒழித்துக் கருணைச் செயலாலே இன்பத்தை ஆக்குபவன் அவன். மனிதர்கள் எல்லோரும் துன்பம் நீங்கி இன்பம் அடைய வேண்டுமென்று நினைக்கிறார்கள். நோய் நீங்கி, நலம் பெற வேண்டுமென்றால் நோயை நீக்க மருந்து கொடுக்கின்ற டாக்டரே, உடல் நலம் பெருக ‘டானிக் கொடுக்கிறார். அதைப் போல 26