பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை இன்பத்தை இப்பொழுதே அடைந்து கொண்டிருக்கிறோமே! இதைவிடப் பெரிய இன்பம் மோட்சத்தில் உண்டா? அது எங்களுக்கு வேண்டியதில்லை' என்று சொல்கிற விறல் அவர்களுக்கு உண்டாம். 'விடும் வேண்டா விறலின் விளங்கினார்' என்று தொண்டர்களின் பெருமையைச் சேக்கிழார் சொல்கிறார். வீட்டைக் கொடுக்கிறவன் பரம தாதாவாகிய இறைவன். அவன் கொள் எனக் கொடுக்கிறபோது, கொள்ளேன் என்று சொல்கிற மன இயல்வு உடையவர்கள் கொடுக்கிறவனையும்விடப் பெரிய வர்கள் அல்லவா? 'கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று' என்ற புலவருடைய வாக்கைக் கொண்டு பார்த்தால் இறைவன் பெரியவன் என்று புலப்படும், வீட்டை யாவருக்கும் கொடுப்ப தனாலே. ஆனால் அந்த வீட்டையும் கொள்ளேன் என்று சொல் கிற தொண்டர்கள் அவனைவிடப் பெரியவர்கள் என்றுதானே சொல்லவேண்டும்? அடியார்களுக்குத் தங்களுடைய அன்பையும் நெஞ்சையும் ஆண்டவனுக்குக் கொடுக்கத் தெரியும். அவனிடத்தில் இருந்து இது தா என்று கேட்டு வாங்கத் தெரியாது. உண்மையில் இறைவன் அவர்களுக்கு ஏதேனும் அநுபவம் வழங்குகிறான் என்றால் அவர் களை அறியாமல் அவர்களிடத்தில் அது சேருகிறது. அவர்கள் நினைப்பின்றி அந்த இன்ப அனுபவம் நிகழ்கிறது. அநுபவத்தைத் தருகிறவன், அநுபவிக்கின்றவன், அநுபவம் என்று மூன்றையும் கடந்த நிலையில் அந்த அநுபவம் நேருகிறது. ஆகையால அந்த அநுபவ நிலையில் கொடுப்பார், வாங்குவார் ஆகிய வேற்றுமை இல்லை. திரிபுடியற்ற நிலை என்று சாஸ்திரம் இதனைக் கூறும். இத்தகைய தொண்டர்களிடையே சார்ந்தால் நாம் பெற வேண்டிய கதி கிடைக்கும் என்று அருணகிரியார் சொல்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தம்மிடம் இருப்பது போதாமல் வேண்டும் வேண்டும் என்று மேலும் பிறரிடம் உள்ள செல்வத்தை இரந்து ஈட்டியும், தம்மிடத்துள்ள பொருளைக் கரந்து வைத்துக் 353