பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 கொடுக்காமல் பாதுகாத்தும் சுற்றித் திரியும் மனிதர்களுடைய இயல்பைப் பார்த்து ஏமாந்து போகிற நெஞ்சுக்கு அறிவுறுத்துகிறார். நிறைவுபெறாச் செல்வம் சை உண்டாகிவிட்டால் எவ்வளவு செல்வத்தைக் குவித்தாலும் திருப்தி உண்டாகாது. திருப்தி உண்டாகி விட்டால் எவ்வளவு சிறிய அளவில் பெற்றாலும் அதுவே போதும் என்ற மன அமைதி உண்டாகிவிடும். அந்த அமைதியை உண்டாக்கிக் கொள்வதற்குச் செல்வம் காரணம் ஆகமாட்டாது. அவ்வமைதியைக் குலைப்பற்கு வறுமையும் காரணம் ஆக மாட்டாது. இறைவன் திருவருள் பெற்றவர்களுக்கு வறுமை, செல்வம் ஆகிய இரண்டிலும் மன அமைதி இருக்கும். ஆகவே, "தேர், கரி, பரி ஆகிய செல்வத்தைக் கண்டு ஏமாந்து போகிற நெஞ்சமே! அவைகள் எல்லாம் நீரில் எழுத்துப் போல மாய்ந்துவிடுமே! இதனை நீ உணர்ந்திலையே! உண்மையான அருட் செல்வத்தைப் பெற்றவர்கள் கூட்டமாகக் கூடுவார்கள். அவர்களைச் சார்ந்தால் மன நிறைவு பெறலாம். வேறு யாரைச் சார்ந்தாலும் அந்த நிறைவு கிடைக்காது. தொண்டர் குழாத்தைச் சாரின் அன்றி வேறு கதியே இல்லை" என்று அருணகிரியார் உபதேசம் செய்கிறார். சார்பினால் வரும் சிறப்பு ரு மனிதனுடைய குணத்தை அவனுடைய சார்பை உணர்ந்து தெரிந்து கொள்ளலாம். 'உன்னுடைய நண்பர் இன்னார் என்று சொல். உன் இயல்பைச் சொல்கிறேன்' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. நாமாக முயற்சி செய்து நன்மை பெறாவிட்டாலும் சார்பின் வலிமையினால் பெறலாம். அதுபோல் நல்ல குடியில் பிறந்து, நல்ல பழக்கம் உள்ள மக்க ளோடு வாழ்பவன் மாறிப் போய்த் தீயவர்களோடு பழகினால் தீமையும் அவன் விரும்பாமல் அவனைச் சார்ந்து விடுகிறது. தேரும், கரியும், பரியும் கொண்டு நாட்டை விரிக்க வேண்டு மென்றும், பொருளை விரித்துக் கொள்ளவேண்டுமென்றும் எப்போதும் திரிந்து கொண்டிருக்கிற அரசர்களைச் சார்ந்தால் நமக்கும் நம்முடைய பதவியையும்,செல்வத்தையும் பெருக்கிக் கொள்ள வேண்டுமென்ற நினைவே உண்டாகிறது. அரசன் வேறு 354