பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார்க்கு நல்ல பெருமாள் முருகன் தன்னுடைய வீரத்தால் துன்பத்தை நீக்கி, கருணையால் அடியார்களுக்கு இன்பத்தை அளிக்கிறான். இன்பத்தை ஆக்கு வதற்கும், துன்பத்தைப் போக்குவதற்கும் அவன் வெவ் வேறு ஆயுதம் வைத்திருக்கவில்லை. துன்பத்தை நீக்குகின்ற ஞான சக்தியாகிய வேலே இன்பத்தையும் ஆக்குகின்றது. அந்த வேலைக் கையில் தாங்கியிருக்கிற வெற்றிவேற் பெருமாள் அவன். நாமம் புகலும் முறை திருநாமம் புகல்பவர் இந்த இருவகைப் பயனைப் பெறு வார்கள். அவனுக்கு ஒரு நாமந்தான் இருக்கிறதா? பக்தர்கள் தங்கள் தங்களுக்குப் பிடித்தபடியே அழைக்கட்டும் என்று ஆயிரத்துக்கு மேற்பட்ட நாமம் உடையவனாக இருக்கிறான். மூன்றெழுத்து நாமம் வேண்டுமானாலும் இருக்கிறது; ஆறெழுத்து வேண்டுமானாலும் இருக்கிறது. அவன் நாமங்களில் எதை வேண்டுமானாலும் புகன்றால் போதும். அவன் தன்னுடைய அடியார்களுக்கு வீரச் செயலினால் துன்பத்தை நீக்கி, கருணைச் செயலினால் இன்பத்தை அளிப்பான். 'நான் எத்தனையோ தரம் முருகா முருகா என்று கத்து கிறேன். அவன் அருள் செய்யவில்லையே!' என்று சொல்வோர் நம்மிடையே இருக்கிறார்கள். உள்ளம் கலந்து, கருத்து ஒன்றி உணர்ச்சியோடு சொன்னால் அவன் வருவான். நாடக மேடை யில் நிற்கின்ற ஒருவன், 'அம்மா' என்று அழைத்தால் உண்மை யான அம்மாவா மேடைக்கு வருவாள்? வெறும் வாயால் உலகமாகிய நாடக மேடையில் ஏறியுள்ள நடிகனைப் போல, 'முருகா முருகா!' என்று அழைத்தால் அவன் வரமாட்டான். உள்ளத்தோடு கலந்து அழைக்க வேண்டும். வாயிலிருந்து வருகிற சொல் நாவோடு மாத்திரம் நிற்காமல் உள்ளத்தோடும் உணர்ச்சி யோடும் கலந்து வரவேண்டும். வாயிலிருந்து வரும் சொல் உள்ளத்தில் பொங்கியெழும் உணர்ச்சியின் அறிகுறியாக வந்தால் அதற்குப் பயனுண்டு. பல காலமாகக் காணாமல் இருந்த குழந்தையைக் கண்டவுடன் தாய் எப்படி அழைக்கிறாள், அப்படி முருகனை அழைக்க வேண்டும்; அவன் திருநாமத்தைப் புகல வேண்டும். அதற்கு நிச்சயமாகப் 27