பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான கலையும் மையல் வலையும் 'நீங்களே சொல்லுங்கள். இது நியாயமா? நான் இருக்கும் போது இவர் வேறு ஒரு பெண்ணை இந்த வீட்டில் கொண்டு வந்து வைத்துக் கொள்ளலாமா?' என்று அந்த அம்மாள் கேட்டாள். "நிச்சயம் வைத்துக் கொள்ளக் கூடாது. இவர் அப்படிச் செய்யக் கூடியவர் அல்லவே! என்று கூறிய பிட்சு அவன் பக்கம் திரும்பிப் பார்த்தார். 'இவளை அன்றி வேறு எந்தப் பெண்ணோடும் நான் பழகி யதே இல்லை. நானாவது வீட்டில் இவளுக்குத் தெரியாமல் ஒரு பெண்ணைக் கொண்டு வைத்துக் கொள்வதாவது!" என்று பரிதாபமாகப் பேசினான் அவன். இதைக் கேட்டாளோ இல்லையோ அந்த அம்மாள் முன்னை யும்விட அதிகக் கோபம் கொண்டாள். 'அழைத்துக்கொண்டு வந்து உள்ளே வைத்திருப்பதும் அல்லாமல் பொய்யா சொல்கிறீர்கள்? சுவாமி! நீங்கள் உள்ளே வாருங்கள். நான் காட்டுகிறேன்' என்று அந்தப் புத்த பிட்சுவை உள்ளே அழைத்துக்கொண்டு போய்க் கண்ணாடியுள்ள பெட்டியைக் காட்டினாள். பிட்சு அதைத் திறந்து பார்த்தார். கண்ணாடியில் அவர் முகம் தெரிந்தது. அவர் உடனே ஆச்சரியம் மிக்கவராய்க் கூவினார்; 'அம்மா அம்மா இங்கே பாருங்கள். அந்த அம்மாள் நம் எல்லோ ருக்கும் இரகசியம் தெரிந்துவிட்டதே என்று எண்ணி வெட்கித் தன் தலையை மொட்டையடித்துக் கொண்டுவிட்டாள் என்றாராம். அவரவர்கள் பார்க்கிறபோது வெவ்வேறு முகம் தோற்றியது. அந்தத் தோற்றத்துக்குக் காரணம் கண்ணாடி யிலா இருக்கிறது? பார்ப்பவர்களிடம் இருக்கிறது. உள்ளமும் உலகமும் இப்படி இந்த உலகமாகிய கண்ணாடியைப் பார்க்கிறவர் களில் சிலருக்கு, 'உலகம் முழுவதும் இன்பமாகக் காட்சி அளிக் கிறது” என்றால் அவர்களே இன்பத்தின் வடிவாக இருக்கிறார்கள். சிலர், 'உலகம் முழுவதும் துன்பம் நிரம்பி இருக்கிறது' என்றால் அவர்களே துன்பத்தின் சின்னமாக இருக்கிறார்கள். 'உலகில் நல்லவர்களே இல்லை; திருடர்களும், நயவஞ்சகர்களும் நிரம்பி 35