பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 மலையாகச் செல்வம் அவனிடத்தில் சேருகிறது” என்பார்கள். அதேபோல, "மலை போலத் துன்பம் வந்துவிட்டதே' என்று தலையின்மேல் கை வைத்துக் கொள்கிறவர் எத்தனை பேர் ஞானத்தையே வேலாக உடைய முருகன் தேவர்களுக்கு மலை மலையாக வந்த துன்பங்களை அழிந்து போகும்படி செய் தான். அவர்களுக்குத் துன்பம் அளித்து வந்த அசுர மலைகள் எல்லாம் பொடிப் பொடியாகும்படி செய்தான். தேவர்களை அழிக்க வந்த பெரிய மலை ஒன்று இருந்தது. அதற்குக் கிரவுஞ்சம் என்று பெயர். அதைக் கண்டு முதலில் மலைத்தார்கள் தேவர்கள். இறைவன் அதைப் பொடிப் பொடியாக்கினான். மலைபோல வந்தது பணி போலப் போயிற்று என்பார்களே, அப்படி ஆகிவிட்டது. கலையும் வலையும் ஞானத்தையே வேலாக உடைய பெருமானிடத்தில் ஞான கலையைப் பெறவேண்டும். அதனால் மலையையும் பொடிப்படுத்தி விடலாம். அதனைப் பெறாதவர்கள் துன்புறுகிறார்கள். அவர்கள் அகங்காரத்தால் அவன் திருவடி சேராது தலை திரும்பி நிற்பவர்கள். முன்னவர்களுக்கு விளைவது ஞானம். பின்னவர்களுக்கு விளைவது மையல். ஞானம் உடையவர்கள் மலையையும் பொடியாக்குவார் கள். ஞானம் இல்லாதவர்களோ, ஒன்றும் இல்லாத சிறியதையும் பெரிய மலையென்று அஞ்சுவார்கள். ஒரிடத்தில் ஞான கலை இருக்கிறது; மற்றோர் இடத்தில் காம விடாயினால் உண்டாகின்ற மையல் வலை இருக்கிறது. ஞான கலையைத் தரும் தலைவன் கந்தன். மையல் வலையை வீசுபவர்கள் கட்டாரி வேல் விழியார். இரண்டு பேர்களிடமும் வேல் ஆயுதமாக இருக்கிறது. அவன் வேலாயுதன். இவர்கள் வேல் விழியார்கள். வேலாயுதன் செய்ததை அருணகிரியார் சொல்கிறார். வெற்பைப் பொருதது பொட்டாக வெற்பைப் பொருத கந்தா! சாதாரண மலையைக் கண்டாலே நாம் மயங்குகிறோம். நிற்கின்ற மலைகள் இவை. கந்தன் பொடியாக்கியதோ பறந்த மலை; ஆகாயத்தில் பறந்து சென்று எங்கே ஜன நெரிசல் 38