பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான கலையும் மையல் வலையும் அவன் திருவருளால் ஞான கலை பெற்றவர்களும் அப்படிச் செய்கிறார்கள். மையல் வலைக்குக் கட்டுப்படாமல் இருப்பது ஞான கலை உள்ள மனம். யார் ஞான பண்டித சாமியோ, யார் ஞான கலாநாதனோ அவனிடத்திலிருந்து ஞான கலை வர வேண்டும். ஞானமென்னும் கலையையே ஒளி வீசும் கூர்மை உடைய வேலாகத் தன் திருக்கரத்தில் அவன் வைத்திருக்கிறான். அது மலையைப் பொட்டுப் பொட்டாக்கிய வரலாறு நமக்குத் தெரியும். அவன் அருளால் நமக்கும் அவனிடத்திலிருந்து கொஞ்சம் ஞான கலை கிடைத்தால் மலை மலையாக நமக்கு வருகின்ற துன்பங் களைப் பொட்டுப் பொட்டாக ஆக்க முடியும். ஞானிகளும் கலைஞர்களும் ஞானிகளுக்கும், கலைஞர்களுக்கும் வேற்றுமை அதிகம் இல்லை. வால்மீகி முனிவரைப் போன்ற மகாஞானி யாராவது இருக்க முடியுமா? அவரைப்போன்ற கலைஞனும் இல்லை. ஞானி தன் அளவில் அநுபவத்தைப் பெற்றிருக்கிறான். கலைஞன் தான் பெற்ற அறிவைப் பிறருக்கும் பயன்படச் செய்கிறான். ஒரு சாலை வழியே போகும்போது சப்பாத்திப் புதரைப் பார்த்தால் நாம் வெறுக்கிறோம்; ரோஜாச் செடியைக் கண்டால் மகிழ் கிறோம். ஞானிகளுக்கு ரோஜாச் செடியைப் பார்க்கும்போதும், சப்பாத்தி முள்ளைப் பார்க்கும்போது வெறுப்போ மகிழ்வோ உண்டாவதில்லை. கலைஞன் ரோஜாச் செடியையும் மகிழ்வோடு பார்க்கிறான்; சப்பாத்தியையும் மகிழ்வோடு பார்க்கிறான். இரண் டையும் சித்திரமாக எழுதுகிறான். ஆகவே, ஞானியும் கலை ஞனும் ஒரே நிலையில் இருந்து எதையும் பார்க்கிறார்கள். ஞானி விருப்பு வெறுப்பு இல்லாத நிலையில் இருந்து பார்த்தால், கலைஞன் மகிழ்ச்சி என்ற நிலையில் இருந்து பார்க்கிறான். ஞானசம்பந்தர் ஞானசம்பந்தப் பெருமான் ஞான கலையுடையவர். "உவமையிலாக் கலைஞானம் ஒதரிய மெய்ஞ்ஞானம்” ஆகியவற்றைப் பெற்றார் ஞானசம்பந்தர் என்று சொல்கிறார் சேக்கிழார். எம்பெருமாட்டி குழைத்துக் கொடுத்த சிவஞானப் 43