பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான கலையும் மையல் வலையும் ஒப்படைக்கத்தான் வேண்டும்" என்று எண்ணித் தகனம் ஆன மறுநாள் பொறுக்கிய எலும்புகளை எல்லாம் ஒரு பானையில் போட்டு வைத்திருந்தார். பூம்பாவை எழுதல் ஞானசம்பந்தப் பெருமான் திருவொற்றியூர் வந்தார். வந்த வுடனேயே சிவநேசர் அப்பெருமானை எதிர் சென்று மயிலைக்கு அழைத்து வந்து, நடந்த வரலாறுகளைச் சொல்லிப் பூம்பாவையின் எலும்புகளை வைத்திருக்கும் பானையை அவர் முன் கொண்டு வந்து வைத்து, அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று இறைஞ்சி னார். சிவநேசச் செட்டியாரின் அன்பு தம் உள்ளத்தைத் தொட்டு விட்டதால், ஞானசம்பந்தர் அதை ஏற்றுக்கொண்டார். பலரும் அப்பானையைக் காணுமாறு கோயிலுக்குப் புறம்பே ஓரிடத்தில் வைத்து, உள்ளம் உருக, "மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலை' என்ற பதிகத்தைத் தொடங்கி, 'போதியோ பூம்பாவாய்' என்று ஒவ்வொரு பாட்டும் முடியும்படி பாடினார். அப்பாட்டைக் கேட்ட பூம்பாவையின் எலும்புகள் ஒன்றுகூடி அழகான பெண் உருவாயின. திருமயிலையிலே ஆண்டுதோறும் முழங்கை வழியே நெய் வார அடியார்களுக்கு அன்னமிட்டுக் கொண்டாடும் விழாக் கள் பல நடந்தன. 'அவ்விழாக்களை எல்லாம் கண்டுகளிக்காமல் நீ போகிறாயோ பூம்பாவையே!' என்று ஞான சம்பந்தப் பெருமான் தம் பாட்டில் பாடியிருந்தார். ஞானசம்பந்தர் இறைவனை விளித்துப் பாடியிருக்கிறார். மக்களை நோக்கிப் பொதுவாகப் பாடியதுண்டு. தம் நெஞ்சைப் பார்த்தும் பாடியுள்ளார். தனிப்பட்டவர்களைப் பார்த்துப் பாடிய தில்லை. ஆனால் இரண்டு பெண்களின் பெயரைச் சொல்லி அழைத்துப் பாடியிருக்கிறார். சம்பந்தர் பாட்டில் விளித்துப் பாடும் பாக்கியம் பெற்றவர்கள் மங்கையர்க்கரசியாரும் பூம்பாவையு மாவர். ஒவ்வொரு பாட்டிலும் பூம்பாவாய் என்று அவளை விளிக்கிறார். அவர் பாடினவுடனே அந்தப் பருவத்திற்கு ஏற்ற வளர்ச்சி யோடு முட்டையிலிருந்து குஞ்சு வெளிவருவது போல ஞான சம்பந்தப் பெருமான் முன் நின்றாள் பூம்பாவை. அவளைக் கண்டவுடனே சிவநேசருக்கு ஆனந்தம் பொங்கிற்று. 'இறந்து 45