பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான கலையும் மையல் வலையும் 'எண்ணிலாண்டு எய்தும் வேதாப் படைத்தவள் எழிலின் வண்ணம் நண்ணும்நான் முகத்தால் கண்டான்.” தான் படைத்த படைப்பைத் தன்னுடைய பெண்ணாகப் பார்க்கும் ஞானம் அவனுக்கு இல்லை. அவள் எழிலின் வண்ணம் கண்டு மணந்தான். அவன் பல ஆண்டு சென்ற கிழவன். ஆனால் ஞான சம்பந்தரோ பதினாறு வயசு நிரம்பப்பெற்ற காளை. இவரது படைப்புப் பூம்பாவை. பிரமன் தன் படைப்பை எப்படிக் கண்டான், கலை ஞானம் உண்ட ஞானசம்பந்தர் தமது கட்டிளங் காளைப் பருவத் தில் தம் படைப்பை எப்படிக் கண்டார் என்ற இரண்டையும் இணைத்துச் சேக்கிழார் சுவாமிகள் சொல்கிறார். 'எண்ணிலாண்டு எய்தும் வேதாப் படைத்தவள் எழிலின் வண்ணம் நண்ணுநான் முகத்தால் கண்டான்; அவளினும் நல்லாள் தன்பால் புண்ணியப் பதினா றாண்டு பேர்பெறும் புகலி வேந்தர் கண்ணுதல் கருணை வெள்ளம் ஆயிரம் முகத்தால் கண்டார்.” எண்ணில் அடங்காத வயசான பிதாமகன், தான் படைத்த சரஸ்வதி தேவியின் எழிலின் வண்ணத்தைக் கண்டான்; தான் படைத்தவளை அழகுப் பிழம்பாகப் பார்த்தான். காமம் உண்டா யிற்று, மணந்து கொண்டான். ஆனால் ஞானசம்பந்தப் பெருமான் பூம்பாவையைப் படைத்தார். பூம்பாவை சரஸ்வதியைக் காட்டிலும் நல்லாள். எப்படி நல்லவள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டுமானால் தமிழ் நூல்களைப் பார்க்க வேண்டும். தன்னைப் பார்க்கிறவர்களுக்குத் தீய எண்ணம் உண்டாகாமல் தோன்றுபவள் நல்லவள். கலைமகள் மற்றத் திறத்தில் நல்லவளே. ஆனால் அவள் உருவம் பிரம தேவன் கண்ணிலே பட்ட மாத்திரத்தில் அவளை மணக்க வேண்டு மென்ற ஆசை அவனுக்கு மூண்டது. பூம்பாவையின் உருவமோ 47