பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 ஞான சம்பந்தப் பெருமான் உள்ளத்தில் காம எழுச்சியை உண்டாக்கவில்லை. பிறர் நெஞ்சு புகாத கற்பு என்று இதைச் சொல்வார்கள். பூம்பாவை எழுந்தாள். அவள் அழகு ஞான சம்பந்தப்பெருமான் உள்ளத்தில் கலக்கத்தை உண்டாக்கவில்லை. அது மட்டுமா? சரஸ்வதியைப் படைத்தவன் பிரமன். இங்கே ஞானசம்பந்தப் பெருமான் பூம்பாவையைச் சிவபெருமானின் அருளினால் படைத்தார். ஆகவே இது மூலப் படைப்பு. பிரமன் படைப்பாகிய கலைமகளைவிடச் சிவபெருமான் அருளால் படைக்கப்பெற்ற பூம்பாவை பின்னும் நல்லவள் என்பதில் தவறு என்ன? அவளைப் புண்ணியப் பதினாறு ஆண்டு பேர்பெறும் புகலி வேந்தர் ஆகிய ஞானசம்பந்தர் கண்டார். அவளைப் பார்க்கும் போது அவருக்கு இரண்டு விதமான உணர்ச்சி ஏற்பட்டிருக்கலாம். அவள் எழிலைப் பார்ப்பதனாலே காமம் உண்டாகியிருக்கலாம்; அல்லது நாம் படைத்தோம் என்ற நினைப்பினாலே அகங்காரம் முளைத்திருக்கலாம். எம்பெருமாட்டியின் திருக்கரத்தால் கலை ஞானம் ஊட்டப் பெற்றவர் ஞானசம்பந்தர். ஆகவே தம்முன் நின்ற பெருமாட்டியின் எழிலை அவர் காணவில்லை. தாம் படைத்த படைப்பின் ஆற்றலையும் அவர் காணவில்லை. காமமும் இல்லை; ஆணவமும் இல்லை. பின் எதைக் கண்டார்) 'கண்ணுதல் கருணை வெள்ளம் ஆயிரம் முகத்தால் கண்டார்.' ஆண்டவனுடைய கருணையினால் எல்லோரும் மகிழும்படியாகப் பூம்பாவை உயிர் பெற்றாள் என்று இன்புற்றார். ஆண்டவன் கண்ணுதல்; ஞானக் கண்ணை நெற்றியில் பெற்றவன். அவன் அருளில் காமத்துக்கு இடம் இல்லை. அந்த நெற்றிக்கண் காமனை எரித்ததல்லவா? ஞானம் காமத்தையும் அகங்காரத்தை யும் தோன்றாமல் செய்து விட்டது. புறக்கோலத்தைப் பாராமல் ஞானக் கண்ணால் இறைவன் திருவருளைப் பூம்பாவையின் வடிவத்தில் கண்டார் சம்பந்தர். தன் எட்டுப் புறக் கண்களால் பிரமன் பார்த்துக் காமத்தினாலே மனச் சலிப்புக் கொண்டான். ஆனால் கலை ஞானம் உடைய சம்பந்தரோ ஒரு முகம் உடையவர்தாம் என்றாலும் தமது ஞான உள்ளத்திலே முளைத்த 48