பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தித் துறை முன் பாட்டில் அருணகிரியார், மனம் இறைவனது திரு வருளில் ஈடுபடாமல் மங்கையர் கண்ணாகிய வலையில் மாட்டிக் கொண்டு அல்லல்படுவதைச் சொன்னார். அடுத்த பாட்டில் வேறு வகையில் நம் அறிவு தெளிவுபட வேண்டுமென்பது பற்றிச் சொல்கிறார். இரண்டு கடல் உலக வாழ்க்கையில் மக்கள் கூட்டத்தில் இரண்டே இரண்டு கட்சிகள் இருக்கின்றன. ஒரு கட்சி ஒளியை நோக்கிப் போகின்ற கூட்டம்; மற்றொன்று இருளை நோக்கிப் போகின்ற கூட்டம். ஓரிடத்தில் கரை காண முடியாத எல்லை கடந்த இன்பக் கடல் பொங்கிக் கொண்டிருக்கிறது; அதற்கு நேர் எதிர்த் திசையில் பிறவிப் பெருங்கடல் இருக்கிறது. இரண்டுக்கும் எல்லை காண முடியாது. இரண்டாவது கடலில் சென்று சேர்ந்து அதனால் உண்டாகிற துன்பத்தை அனுபவிக்கிறது இருட் கூட்டம். பிறவியாகிய பெருங்கடல் சேர்ந்து மூழ்குகிறவர் களுக்குத் துன்பந்தான் உண்டு என்பதை நாம் நம் வாழ்க்கையில் அறிகிறோம். 'பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம்' என்பது மணிமேகலை. அதற்கு நேர் எதிர்த் திசையில் இருக்கிற கடல் இன்னது என்று நாம் அறிய மாட்டோம். இறைவன் திருவருளி னால் இன்ப அநுபவம் பெற்ற பெரியவர்கள் அதனை அறிந்திருக் கிறார்கள். பிறவிப் பெருங் கடலுக்கு நேர் எதிர்த்தட்டில் ஆனந்த வாரி இருக்கிறதென்று சொல்லியிருக்கிறார்கள். பிறவிப் பெருங்கடலுக்கும், ஆனந்தக் கடலுக்கும் நடுவிலே வாழ்க்கை என்ற மேட்டில் நாம் இருக்கிறோம். இந்த மேடு ஒரே சீரான மேடு அல்ல. பல வகையான குண்டுகுழிகளோடு அமைந்த மேடு; எங்கே பார்த்தாலும் அழுக்கு நிரம்பியிருக்கிறது.