பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 பெரிய அழுக்குக் கடலோடு கலக்கின்ற பல அழுக்குத் துறைகள் அவனுக்குத் தெரிந்தன. காமமாகிய துறை ஒரு பக்கம் இருக்கிறது. மோகமாகிய துறை ஒரு பக்கம். இவற்றைப் போல மதம், மாச்சரியம் முதலான துறைகள் பிறவியாகிய அசுத்தக் கடலில் இருப்பது தெரிந்தது. சென்னையில் உள்ள கூவம் நதியில் எத்தனை சாக்கடைகள் போய்ச் சேருகின்றன. அதனால்மேலும் அது அழுக்கு நிரம்பிய தாகிறதே தவிரத் தெளியக் காணோம். அது போல நமது அறிவாகிய சிறிய ஆற்றைக் கொண்டுபோய்ப் பிறவியாகிய பெரிய அழுக்குக் கடலோடு சேர்ப்பதனால் அது எப்படித் தெளியும் என்னும் சந்தேகம் அந்த ஆற்றை உடையவனுக்கு வந்துவிட்டது. புத்தித் தரங்கம் தெளியும் துறை அவனுக்குத் தெரியவில்லை. பிறவியாகிய அழுக்குக் கடலோடு சங்கமம் ஆகும் காமம், மோகம் முதலாகிய துறைகளே அவனுக்குத் தெரிந்தன. தன்னுடைய புத்தி யாகிய சிறிய ஆறு, தெளிய வைக்கும் கடலோடு போய்க் கலக்கக் கூடாதா என்று அப்பெரியவர் சொன்னாரே. அந்த வாரியோடு கலக்கும் துறை தெரியவில்லையே என்று அவன் ஏங்கிக் கொண் டிருக்கும் பொழுது அப்பெரியவர் மறுபடியும் வந்தார். வந்தவுடனே, 'சுவாமி நீர் என் புத்தித் தரங்கம் தெளிய ஆனந்த வாரியின் துறை தேடிப் போகச் சொன்னீர்களே! அதற்குத் துறை எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லையே! பிறவிப் பெருங்கடலோடு கலக்கும் துறைகள்தாமே எனக்குத் தெரிகின்றன? ஆனந்த வாரி யோடு கலப்பதற்கும் பல துறைகள் உண்டா?' என்று கேட்டான். - ஞானத்துறை அந்தப் பெரியவர் சொன்னார். 'அதற்கும் பல துறைகள் உண்டு. முக்கியமாக மூன்று துறைகள் இருக்கின்றன. ஞானம் என்பது ஒரு துறை. அழுக்கு நீர் மணல் நிரம்பிய பாலை வனத்தின் வழியாகப் போகும்போது இயல்பிலேயே அந்நீரின் அழுக்கைப் பாலைவனத்திலுள்ள மணற் பரப்பு வடிகட்டிவிடும். அந்தப் பாலைவனப் பாதையைப் போன்றது ஞானத்துறை. அதன் வழி யாக உன்னுடைய புத்தியாகிய சிறிய ஆறு போனால் வாரியோடு சங்கமம் ஆவதற்குள் அது தெளிந்துவிடும். ஆனால் ஒன்று' என்று நிறுத்தினார் அப்பெரியவர். 54