பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தித் துறை "ஆனால் ஒன்று என நிறுத்திவிட்டீர்களே சுவாமி அது என்ன?" என்று கேட்டான் இவன். 'பாலைவனத்தின் வழியாகப் போகும்போது ஆற்றில் புதுத் தண்ணீர் வந்து கொண்டே இருந்தால்தான் கடலோடு சங்கமம் ஆகும் வரையில் ஆற்றில் ஒட்டம் இருக்கும். புதுத் தண்ணீர் மேலும் மேலும் வராமல் போனால் ஆற்றின் நீர் அப்பாலை வனத்திடையே சுவறிவிடக் கூடும். ஆனந்தவாரியை அடைய உன் னுடைய புத்தியாகிய ஆறு ஞானமாகிய துறை வழியே போகும் போது ஞான விசாரமாகிய அப்பாலைவனத்திடையே சுவறி விட்டால் ஆனந்தவாரியை நீ போய்ச் சேரமுடியாதே' என்றார். ஆற்றை உடையவனுக்குப் பயம் உண்டாகிவிட்டது. "அது மிகவும் கடினமான துறை போலிருக்கிறதே! அது நமக்குப் பலிக் காது. வேறு துறை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் என்றான். கர்மத்துறை 'ஞானமாகிய துறை உனக்குப் பயன்படாது என்று எனக்குத் தெரியும். அதற்குப் பக்கத்திலேயே கர்மம் என்ற ஒரு துறையும் இருக்கிறது. அந்தத் துறையும் உனக்குக் கொஞ்சம் கடினந்தான். ஆறு பெரிய மேட்டிலே ஏறிச் செல்லவேண்டும். பள்ளத்திலிருந்து மேட்டில் ஏற வேண்டுமென்றால் சாதாரண மான காரியமா?' என்று அப்பெரியவர் சொல்வதற்குள், 'என்ன சுவாமி, இந்தத் துறையும் எனக்குப் பயன்படாதுபோல் இருக் கிறதே. எனக்குப் பயன்படக்கூடிய வேறு ஏதாவது எளிய துறை யாக இருந்தால் சொல்லக் கூடாதா?’ என்று கெஞ்சினான். g பக்தித்துறை 'உன்னால் ஞானமாகிய துறை வழியாகவோ, கர்மம் என்ற துறை வழியாகவோ போக முடியாது என்றால் அதைப் பற்றிக் கவலை வேண்டாம். வேறு ஒரு துறை இருக்கிறது. அதற்குப் பக்தி என்று பெயர் பக்தித் துறையின் வழியாக எளிதிலே சென்று ஆனந்தவாரியோடு கலந்து புத்தித் தரங்கம் தெளியும் படியாகச் செய்து கொள்ளலாம்' என்று அந்த உபகாரி சொல்லி விட்டுப் போனார். க.சொ.11:1-5 55