பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 அவனுக்கு ஆனந்தவாரியோடு கலக்கும் பக்தித் துறை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. 'ஆனந்தவாரி என்று பலர் சொல்கிறார்களே, அது இருக்கிறதா?” என்ற சந்தேகமே அவனுக்குத் தெளியாமல் இருந்தது. தன் கண் எதிரே விரிந்து கிடக்கின்ற உப்புக் கடல் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது; பிறவிப் பெருங் கடல் தெரிந்தது. இருந்தாலும் யோசித்துப் பார்த்தான். ஆராய்ச்சி 'இந்த உலகத்தில் எல்லாப் பொருளும் இரட்டையாக அல்லவா இருக்கின்றன? பள்ளம் என்றால் மேடு இல்லாமல் இராது. இருள் என்றால் ஒளி இல்லாமல் இராது. முள் என்றால் மலர் இல்லாமல் இராது. தளிர் என்றால் சருகு இல்லாமல் இராது. ஆகவே உப்புக் கடல் என்றால் உப்பு இல்லாத நன்னீர்க் கடலும் இருக்கத்தான் வேண்டும். பிறவிப் பெருங்கடல் என்று சொன்னால் அல்லாத ஆனந்தக் கடலும் இருக்கத்தான் வேண்டும்' என்று நினைத்தான். இப்படி நினைத்தவுடனேயே அவனுக்குப் பல உண்மைகள் விளங்கின. பிறவிக் கடல் எப்படிக் கரை இல்லாமல் எல்லை யின்றி விரிந்து கிடக்கிறதோ, அதைப் போலவே ஆனந்தக் கடலும் இருக்க வேண்டும். பிறவிக் கடல் அழுக்கு நீர் உடையது என்றால் ஆனந்தக் கடல் தூய நன்னீர் உடையதாக இருக்க வேண்டும். பிறவிக் கடலுக்குப் பல துறைகள் இருப்பது போலவே ஆனந்தக் கடலுக்கும் பல துறைகள் இருக்க வேண்டும்’ என்று தன் அறிவினால் ஆராய்ந்து தெளிந்தான். 'நாம் சென்று சேரவேண்டிய லட்சியக் கடல் இருப்பது தெரிந்தும் இன்னும் அங்கே போய்ச் சேராது இருக்கிறோமே!’ என்று ஆற்றை உடையவன் தவிக்க ஆரம்பித்துவிட்டான். 'பிறவி யாகிய அழுக்குக் கடலோடு காமம், மோகம் போன்ற பலவித மான அழுக்குகள் படிந்துள்ள என் அறிவாகிய ஆறு கலப்பதனால் பயன் இல்லை. என்னுடைய சொந்த முயற்சியினாலே ஆற்றை வடிகட்டியோ, தெளியவைத்தோ சுத்த நீராக்கலாம் என்றாலும் அந்த முயற்சி பலிக்காது. ஆற்றில் அழுக்கு நீர் ஓடிக்கொண்டு இருக்கும்போதே இதைத் தெளியவைக்க வேண்டும். அதற்கு என்ன வழி?” என்று அவன் ஏங்கிக் கொண்டிருக்கும்போதுதான் பெரியவர் அவனுக்கு ஒரு நுட்பத்தைச் சொல்லிக் கொடுத்தார். 56