பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 கொச்சி ராஜ்யம் சேர்ந்த பொழுது திருவாங்கூர் - கொச்சி என்று பெயர் வைத்தார்கள். அதைப்போல யமுனை கங்கையோடு கலந்த வுடன் யமுனா - கங்கா எனப் பெயர் வைத்தாலும் வைக்கலாம். ஆனால் பழங்காலத்தில் அப்படி இல்லை. யமுனை கங்கையோடு கலந்தபின் யமுனை என்ற பெயர் மறைந்து அது கங்கையாகவே ஆகிவிடுகிறது. யமுனையின் தூய நீர் கங்கையோடு கலக்கும் போதும் கங்கை கங்கையாகவே இருக்கிறது. அதன் புனிதத் தன்மை யமுனையினால் அதிகமாகவில்லை. காசி நகரத்துச் சாக்கடைகள் கங்கையோடு போய்த்தானே கலக்கின்றன, ஊரினது கழுநீர் எல்லாம் கங்கையோடு போய்க் கலந்தாலும் கங்கையின் பெயர் மாறவில்லை. அதன் புனிதத் தன்மையும் மாசுபடவில்லை. கங்கை கங்கையாகவே தூய நன்னீருடன் ஒடிக் கொண்டிருக்கிறது. "கங்கையின் யமுனை போய்ச் சேருவதனால் கங்கை மாசு படவில்லை என்பதில் ஆச்சரியம் இல்லை; இனம் இனத் தோடு கலந்தது எனச் சொல்லலாம். தூய நீர் தூய நீரோடு கலக்கும் போது மாறுதல் எதுவும் ஏற்படுவதற்கு வழி இல்லை. கங்கை யோடு அதற்கு மாறான சாக்கடைகள் போய்க் கலப்பதனாலும் கங்கை மாறவில்லையே! அதுதான் கங்கையின் பெருமை 'ஊர்அங் கனநீர் உரவுநீர் சேர்ந்தக்கால் பேரும் பெரிதாகித் தீர்த்தமாம்” என்பது நாலடி. சாக்கடை என்ற பெயர் மாறித் தீர்த்தம் என்ற பெயர் வந்துவிடுகிறதாம். "எல்லா அழுக்கையும் போக்கி, தான் எப்போதும் தெளிந்த நிலையிலேயே இருக்கிறது கங்கை. கங்கையோடு நல்ல நீர்தான் கலக்கவேண்டும், அசுத்தமான அழுக்கு நிரம்பிய நீர் கலந்தால் அதன் புனிதத்தன்மை கெட்டுவிடும் என்பது இல்லை. அதைப் போலவே உன்னுடைய அறிவாகிய ஆறு அழுக்கு நீர் உடையதாக இருக்கிறதே என்று கலங்க வேண்டாம். அது கலப்பதனால் ஆனந்தவாரி கெட்டுப் போகாது." ஆனந்தவாரியில் கலத்தல் 'அழுக்கு நிரம்பிய அறிவு நீர் கொஞ்சமாக இருப்பதனால் அலை மோதுகிறது; கொந்தளிக்கிறது. அது பக்தித்துறை வழியாக 58