பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தித் துறை ஆனந்தவாரியில் படிந்துவிட்டால் ஆனந்தவாரி கலங்காது. புத்தித் தரங்கம் தெளியும். கங்கை சாக்கடை ஆகாமல் சாக்கடைகள் கங்கை ஆவது போல, ஆனந்தவாரி கலங்காமல் உன் புத்தித் தரங்கம் ஆனந்தவாரியாகிவிடும். அழுக்கு நிரம்பிய உன்னுடைய புத்தித் தரங்கம் தெளியப் பக்தித் துறையிழிந்து, ஆனந்த வாரியோடு கலந்துவிடு. பக்தித் துறை அல்லாமல் வேறு பல துறைகளும் இருக்கின்றனவாயினும் அவற்றின் வழியே புகுவதற்கு நெடுங்காலம் பிடிக்கும். நிச்சயமாகப் போக முடியுமோ என்னவோ தெரியாது. ஆகவே அங்கே போய்ச் சேருவதற்கு மிக எளிதானதும் பக்கத்தில் உள்ளதும் பக்தித் துறைதான். அதன் வழியே சென்றால் மிக எளிதில் ஆனந்தவாரியோடு சிற்றாறு கலந்துவிடும். அப்புறம் அங்கே அறிவாகிய சிற்றாறே இராது. முன்னாலே இருந்த அடையாளம் கொஞ்சங்கூட இல்லாமல் ஆனந்த வாரியாகவே அது ஆகிவிடும். உன் புத்தித் தரங்கத்தின் நாற்றம் இராது. இப்போது அந்தப் புத்தித்தரங்கத்தில் களவு, விபசாரம், கோபம் போன்ற பல பல வாசனைகள் படிந்திருக்கலாம். ஆனால் ஆனந்தவாரியோடு கலந்துவிட்டால் இவ்வெல்லா வாசனையும் போய்விடும். உன்னுடைய ஆற்றைப் போலவே எத்தனையோ ஆறுகள் முன்பே அதில் ஆனந்தவாரியாகவே ஆகியிருக்கின்றன. அதைப் போலவே உன்னுடைய ஆறும் ஆகும். ஆனந்தவாரி யோடு கலந்தவுடனே ஆனந்தவாரியின் மணந்தான் அடிக்கும். 'ஆகவே, ஆனந்தவாரியைச் சென்று சேர்வதற்குப் பக்தித் துறை யிழிந்து செல் அப்பா!' என்று அப்பெரியவர் சொன்னார். மேலே சொன்ன கதையையும், அருணகிரி நாதர் கூறும் பாட்டையும் சேர்த்துப் பார்க்கலாம். - 2 ஆறறிவுடைய மனிதன் மனிதன் உலகத்தில் வாழ்கிறான். விலங்கினங்களும் வாழ்கின்றன. விலங்கினங்களைவிட மனிதன் உயர்ந்தவன். விலங்கினங்களுக்கு இல்லாத சிறப்பு மனிதனிடத்தில் என்ன இருக்கிறது? 'மனிதனுக்கு மனம் இருக்கிறது; விலங்கினங் களுக்கு அது இல்லை என்று சொல்லலாமா? தம் எசமானன் 59