பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 ஒரு புலவர் பாடுகிறார்: "தருமம் தவஞ்சற் றறியாத வேடுவன் தன்செருப்பு மருமுந்து வேனிக் கணிமா மலர், அவன் வாய்உதகம் திருமஞ் சனப்புனல், பல்லால் அவன்மென்று தின்றதசை அருமந்த போனகம் அன்றோநம் காளத்தி அப்பனுக்கே" சிவகோசரியாரும், கண்ணப்பனும் பக்தித் துறையில் இழிந்து - ஆனந்தவாரி படிந்தவர்கள். அந்தத் துறையில் இழிவதற்கு முன் அவர்கள் இயல்பிலும் பழக்க வழக்கங்களிலும் வேறுபாடு இருந்தாலும் அதன்பின் அவர்களுள் வேறுபாடு இல்லை. அறிவு கலங்கியிருக்கிறதே இது தெளிவடைந்த பின் பக்தி செய்ய லாம் என்று இராமல், புத்தித்தரங்கம் தெளியாமல் இருந்தாலும் அத்துறையில் இறங்கினால் ஆனந்த வாரியோடு கலக்கலாம். அக்கணமே தெளிவு உண்டாகும். "நான் இந்தத் தெளிவை அடைவது எப்போது?’ என்று வேசாறுகிறார் அருணகிரியார். பத்தித் துறைஇழிந் தானந்த வாரி படிவதனால் புத்தித் தரங்கம் தெளிவதென்றோ? சூர சங்காரம் இந்தக் கேள்வியை முருகனைப் பார்த்துக் கேட்கிறார். பொங்கு வெங்குருதி மெத்திக் குதிகொள்ள, வெஞ்சூ ரனைவிட்ட சுட்டியிலே குத்தித் தரம்கொண்டு அமரா வதிகொண்ட கொற்றவனே முருகன் சுட்டி என்ற ஆயுதத்தை ஒரு முறை விட்டான். அது சூரனைக் குத்தியது. வெம்மையான குருதி பொங்கியது; அது வெள்ளமாக மிக்குக் குதிகொண்டது. இப்படி மேன்மையை அடைந்தான் முருகன்; சுட்டி என்பது குத்தீட்டிக்குப் பெயர். "இல்லறத்துக்குரிய தருமமும் துறவறத்திற்குரிய தவமும் சிறிதேனும் அறியாத வேடுவனுடைய செருப்பு மணம் நிரம்பிய திருமுடிக்கு அணியும் பெரிய மலர், அவன் வாயில் கொண்டு வந்த நிர் திருமஞ்சனத்துக்குரிய நீர், பல்லால் அவன் மென்று தின்ற ஊன் அருமையான நிவேதனம் அல்லவோ நம்முடைய காளத்தி அப்பனுக்கு? 64