பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு ஆறுகள் முன் பாட்டிலே அருணை முனிவர் புத்தித் தரங்கம் தெளி வதற்குப் பக்தித் துறை இழிந்து ஆனந்தவாரி படியவேண்டும் என்றார். ஒரு பொருளைச் சொன்னால் அதைச் சார்ந்துள்ள பொருள்களின் நினைவும் உடன்வரும். அதைப் போலவே முன் பாட்டில் ஆனந்தவாரியைச் சொன்னவர் அடுத்த பாட்டில் இரண்டு ஆறுகளைப் பற்றிச் சொல்கிறார். ஒன்று நம்முடைய வாழ்க்கையாகிய ஆறு, மற்றொன்று காவிரியாறு. மனிதன் தன் வாழ்நாளில் காமத்தினால் அடைகின்ற துன்பம் கொஞ்ச நஞ்சம் அல்ல. உலகத்து மக்கள் எல்லாம் பெரும்பாலும் காமத்திற்கும், செல்வத்திற்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். மக்கள் இறைவன் திருவருளைப் பெறாமல் இருப்பதற்குத் தடையாக உள்ளவை அவை இரண்டும். காமினி காஞ்சனம் என்று அடிக்கடி சொல்வார் இராமகிருஷ்ண பரமஹம்சர். 'அவை இரண்டுமே உலகத்தை இருள் உலகம் ஆக்குபவை. இந்த காமினி காஞ்சனம் ஆகிய இரண்டையும் யார் வென்று விடுகிறார்களோ அவர்களுக்கு ஆண்டவன் திருவருள் கைமேல் கிடைக்கும்’ என்பதற்குப் பலவகையான உதாரணங்களை எடுத்துக் காட்டியிருக்கிறார். செல்வப் பற்று மனிதனுக்குப் பருவத்திலே துன்பம் தருவது காமம். எல்லாப் பருவத்திலும் மக்களை மாயையின் பிரதிநிதியாக இருந்து ஆட்டி வைப்பது செல்வம். செல்வத்தினிடம் மக்களுக்கு அவ்வளவு பற்று இருப்பதற்குக் காரணம் என்ன? இந்திரியங்களால் பெறு கின்ற இன்பங்களுக்குக் காரணமாகிய பண்டங்களை மிகுதியாக ஒருவன் சேர்த்து வைத்துக்கொள்ள முடியாது. பாதாம் ஹல்வா வும் இட்டிலியும் நாக்குக்குச் சுவையாக இருக்கின்றன என்று ஒர் ஆண்டிற்கோ, ஒரு மாதத்திற்கோ வேண்டிய அளவு யாராவது