பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 வனுக்குப் பால் அபிஷேகம் செய்ய வேண்டும்; நம் வீட்டிலே பசுமாடு வைத்திருக்கவில்லை; மாட்டுக்காரனிடம் பணம் கொடுத்துப் பால் வாங்கி அபிஷேகம் செய்கிறோம். இப்படி விலை கொடுத்து எல்லாப் பொருளையும் வாங்குகிற உலகத்தில் நினைத்தால் பொம்மை வாங்கலாம்; பெண்களை வாங்கலாம்; கோயிலை வாங்கலாம்; கடவுளையும் வாங்கிவிடலாம் என்கிற செருக்கு ஏறிக்கொண்டிருக்கிறது. 'முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்' என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். அருளியல் வியாபாரம் அந்தக் காலத்தில் கடவுளை வாங்கிய மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் தம்மைக் கடவுளுக்கு விற்றுவிட்டுக் கடவுளைத் தாம் பெற்றார்கள். - 'தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னை’’ என்று இந்த வியாபாரத்தைப்பற்றி மாணிக்கவாசகர் சொல்வார். சகாதேவன் கடவுளை வாங்கினான்; பிரகலாதன் வாங்கினான்; அப்பர் சுவாமிகள் வாங்கினார். அவர்கள் செய்த வியாபாரம் எத்தகையது? இந்த உலக இயலிலே ஒரு பண்டத்தைக் காசு வாங்கிக் கொண்டு ஒருவனுக்கு விற்றுவிட்டால் இவனிடம் காசுதான் இருக்கும். பண்டம் வாங்கினவனிடத்தில் போய்ச் சேர்ந்துவிடும். ஒருவனிடம் ஒரு டார்ச்சு விளக்கு இருக்கிறது. இருளில் போய்க்கொண்டிருக் கிறான். எதிரே வருகிறவன் ஒருவனிடம் இருந்த டார்ச் எரிய வில்லை. "அப்பா உன் விளக்கைக் கொடு' என்று இவனிடம் இருப்பதை அவன் வாங்கிப் போய்விட்டால் இவனிடம் வேறு விளக்கு இல்லாமல் இவன் இருளில் தடுமாறவேண்டியதுதான். உலகியல் வியாபாரம் இதைப் போன்றது. அருளியல் வியாபாரம் இத்தகையதன்று; அது உலகியலுக்கு மாறானது. ஒருவனிடம் எரிந்து கொண்டிருக்கும் அகல் விளக்கு இருக் கிறது. எத்தனை விளக்கைக் கொண்டுவந்து வேண்டுமானாலும் அந்த அகல் விளக்கில் ஏற்றிக் கொள்ளலாம். அதே சமயம் 68