பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு ஆறுகள் இங்கேயும் விளக்கு இருக்கும். மற்றவர்களிடத்திலும் இந்த விளக்கிலே ஏற்றிய விளக்குகள் இருக்கும். அதைப் போலவே அருளியல் உலகில் வியாபாரம் செய்கிறவர்கள் தங்களிடத்தி லுள்ள பொருளைத் தங்களிடத்தில் இருக்கும்போதே பிறருக்கும் கொடுப்பார்கள். இது மிக அற்புதமான வியாபாரம். வியாபாரி தம்மிடத்தில் உள்ள பொருளைச் செலவழிக்காமலேயே அதை விற்று லாபம் அடைவதென்றால் ஆச்சரியமாக இல்லையா? பிர பஞ்சத்திலே இதைப்போன்ற வியாபாரம் வேறு எதுவும் இல்லை. இத்தகைய அருள் வியாபாரிகள் கூட்டத்தைச் சேர்ந்தவர் அருண கிரியார். அவர்களுக்குப் பொருளினிடம் மோகம் இல்லை. காந்தியடிகளின் பெருமை lொழ்க்கையின் ரூபாய், அனா, பைசாதான் எல்லாம் என்று நாம் நினைக்கிறோம். பணம் இல்லாவிட்டால் வாழ்வே இல்லை, மதிப்பே இல்லை என எண்ணிப் பணத்திற்காகவே பேயாகப் பறக்கிறோம். இது பொய் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். மகாத்மா காந்தி இறக்கும்போது அவரிடம் ஆறு ஏழு சாமான் களே சொந்தமாக இருந்தன என்பதை நாம் பார்த்தோம். அவர் செல்வத்தை வைத்துக்கொண்டு வாழவில்லை. ஆனால் செல்வம் அவர் காலடியில் வந்து விழுந்து கிடந்தது. அவர் பரமேசுவரனைப் போல வாழ்ந்தார். பரமேசுவரன் கையில் கபாலம் ஏந்தி, இடை யில் புலித்தோல் உடுத்து, மேனியெல்லாம் சுடலைப் பொடி பூசி ஆண்டியாகத் திரிகிறான். அவனுடைய நண்பன் குபேரன். எத்தனை பணம் வேண்டுமானாலும் பரமேசுவரனுக்குக் கொண்டு போய்க் கொட்ட ஆயத்தமாகத் தன் கருவூலத்தைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறான். யாராவது குபேரனுக்குப் பரமேசுவரன் நண்பன் என்று சொல்கிறார்களா? குபேரனால் பரமேசுவரனுக்குப் பெருமை உண்டா? இல்லை. குபேரன் தன்னைப் பரமேசு வரனுடைய நண்பன் எனச் சொல்லிப் பெருமைப்படுகிறான். நம்முடைய வாழ்நாளில் பிர்லா என்ற குபேரனைப் பார்த்தோம்; காந்தியடிகள் என்ற பரமேசுவரனையும் பார்த்தோம். யாராவது பிர்லாவுக்குக் காந்தியடிகள் நண்பர் என்று சொன்னது உண்டா? பிர்லாவைச் சொல்லும் போது காந்தியடிகளின் சிஷ்யர் என்று சொன்னார்கள். செல்வம் மதிப்பை உண்டாக்காது என்பதை Ꮾ9