பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 நமக்குப் பிரத்தியட்சமாகக் காட்டியவர் காந்தியடிகள். அதை நாம் பார்த்த பிறகாவது நமக்குச் செல்வத்தினிடத்தில் மதிப்பு இல்லா மல் இருக்கிறதா? செல்வத்தை அவமதிக்கவேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. அதை அளவுக்கு மிஞ்சி மதிக்கக் கூடாது. மதிப்பு வைப்பதற்குரிய பிற பொருள் இருக்கும்போது அதை மறந்து செல்வத்தையே மதித்து வாழ்கிறோம். அவ்வாறு மதிப்பதற்கும் ஒர் அளவு இருக்க வேண்டாமா? அந்த அளவை மீறும்போது தீங்கு உண்டாகிறது. கருத்தில் செல்வம் எந்தப் பொருளை எந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறோமோ அதற்கு ஏற்பத்தான் அதற்கு மதிப்பு. நமது கருத்தில் வைக்க வேண்டிய பொருளைக் கையில் வைத்துக் கொள்கிறோம். கையில் இருக்கவேண்டிய பொருளைக் கருத்துப் பொருளாக்கிக் கொண்டு திண்டாடுகிறோம். இதனால் ஏற்படும் துன்பந்தான் உலக வாழ்க்கை யில் மிக அதிகம். கப்பல் போகும்போது கடல் கொந்தளிக்கிறது. அலை எத்தனை தான் நான்கு தென்னை மரம் உயரம் எழும்பிக் கொந்தளித்தாலும் கப்பலில் ஒட்டை இல்லாத வரைக்கும் பயம் இல்லை. ஆனால் கடல் மிக அமைதியாக இருக்கிறது என்றாலும் கப்பலில் சிறிய ஒட்டை இருக்குமானால் கடல் நீர் உள்ளே வந்துவிடும். தண்ணீர் வெளியே எத்தனைதான் கொந்தளித்துக் கொண்டிரந்தாலும் கவலை இல்லை. தண்ணீர் கப்பலுக்குள் வரத் தொடங்கினால் கப்பலுக்கே ஆபத்து. வாழ்க்கைக்குத் தேவையானது செல்வம். செல்வம் நம் கையில் இருக்கிற வரைக்கும் ஆபத்து இல்லை. செல்வம் கை அளவிலே இருப்பதோடன்றி, உள்ளே கருத்திலே புகுந்துவிட்டால் கப்பலுக்குள் தண்ணீர் புகுந்ததுபோலத்தான். கைப்பொருளாக வைக்க வேண்டி யதைக் கருத்துப் பொருளாக வைக்கக் கூடாது. கருத்துப் பொரு ளாக ஏறிவிட்டால் அது கருத்திற்குரிய மற்றப் பொருளை எல்லாம் அழித்துவிடும். ஆகவே அதைச் செய்யக் கூடாது என்று நமக்குச் சொல்ல வருகிறார் அருணை முனிவர். அதை அலங்காரமாகச் சொல்கிறார். 7Ο