பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு ஆறுகள் வாழ்க்கையாறு நமது வாழ்க்கை ஒரு பேராறு. இது சென்று கொண்டே இருக்கும்பொழுது மரணம் என்கின்ற பெரிய ஏரிகளில் புகுந்து புகுந்து மறுபடி வெளிப்பட்டு வந்து கொண்டே இருக்கும். பெரும்பாலும் காட்டாறுகள் வறண்டு கிடக்கும். வெள்ளம் வந்தால் மேடு பள்ளமாகிவிடும். கரைகளை உடைத்துக்கொண்டு பல ஊர்களையே அழித்துவிடும். வயல்கள் மணல் மேடாகி விடும். இப்படிக் காட்டாற்றில் வெள்ளம் வருவது போலவே செல்வம் வருகிறது. எவ்வளவுதான் பொருளாதாரத் தத்துவம் படித்தாலும் யாராலும் நினைத்தபொழுது நினைத்த அளவு செல்வத்தைப் பெற முடிவதில்லை. திடீரென்று வெள்ளத்தைப் போலவே அது வருகிறது. வந்த இடம் தெரியாமல் வடிந்தும் போகிறது. செல்வம்' என்ற சொல்லுக்கே, போவோம்’ என்று பொருள். 'நிறைசெல்வம், நீரில் சுருட்டும் நெடுந்திரைகள்' என்று குமரகுருபர முனிவர் சொல்கிறார். அவர் பாடுவதற்கு முன்பே பாடியிருக்கிறார் அருணகிரியார். சுழித்தோடும் ஆற்றில் பெருக்கா னதுசெல்வம். இரண்டு ஆறுகள். ஒன்று நாம் காணாத ஆறு. ஆனால் அந்த ஆற்றில்தான் நாம் அமிழ்ந்திருக்கிறோம். அதுதான் நமது வாழ்க்கை ஆறு. நல்ல ஆறு என்பது இரண்டு கரையும் சரியாக இருந்து, எந்த இடத்திலும் தங்காமல், குழம்பித் தேங்கி நிற்காமல் நேராகச் சென்று கடலில் போய் விழும். அப்படி இல்லாவிட்டால் கொந்தளிப்பு நிரம்பிய கடலில் போய் விழுவதற்குள் தனக்குள் பலரை விழப்பண்ணும். நமது வாழ்க்கையாகிய ஆறு பெரிய காட்டாறாக இருக்கிறது அதில் திடீர் திடீரென்று செல்வமாகிய வெள்ளம் வருவதும், வந்த சுவடு தெரியாமல் வடிவதுமாக இருக்கிறது. 'எனக்கு அவனைத் தெரியும் அப்பா எங்கள் தகப்பனா ரிடத்தில் கடன் வாங்கி அந்தக் கடையைத் திறந்தான். இன்று லட்சாதிபதி ஆகிவிட்டான்' என்று ஒருவனுடைய வாழ்க்கை யாற்றில் வெள்ளம் வந்ததைப் பற்றிப் பேசுவதைக் கேட்கிறோம். க.சொ. 11-6 了1