பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு ஆறுகள் செய்யவில்லையே! இருந்தாலும் அவன் இன்பத்தை அநுபவிக் கிறானே! நான் துன்பத்தை அடைவதற்கு உரிய காரியம் எதையும் செய்யவில்லையே! நான் துன்பப்படுகிறேனே! என்று சொல் பவர்கள் உண்டு. துன்பத்தை அடைவதற்குரிய காரியங்கள் எதையும் அவன் இப்பொழுது செய்யவில்லை என்பது உண்மை. முற்பிறவியில் செய்திருக்கிறான். செய்யும்போது நாம் தீய செயல்களைச் செய்கிறோம் என்று எண்ணுவதில்லை. செய்ததைச் செய்துவிட்டு அடுத்த பிறவியில் அதன் பயனை அநுபவிக்கும் போது அழுகிறோம். முன் செய்த வினை என்று உணர்ந்து, இப்போதாவது நல்லது செய்வோம் என்று இருப்பதில்லை. பட்டினத்தார் வரலாறு பட்டினத்தார் கதையில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. அவர் கப்பல் கப்பலாகச் செல்வத்தை ஈட்டி வாழ்ந்தவர். அவரிடம் இருந்த செல்வம் அவ்வூர் அரசனிடம் இருந்ததில்லை. சில சமயங்களில் கடன் வேண்டுமானால் அவ்வரசன் பட்டினத்துப் பிள்ளையை நாடுவான். அத்தனை செல்வத்தையும் உடையவராகிய பட்டினத்தார், 'சுழித்தோடும் ஆற்றில் பெருக்கானது செல்வம்' என்பதை உணர்ந்து அதை விட்டவர். எல்லாச் செல்வத்தையும் விட்டுவிட்டு அவர் மரத்தடியில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அவர்துறவியானது தெரிந்து வருந்திய அரசன் அவரை அழைத்து வரும்படி ஒருவனை அனுப்பினான். செட்டியார் ஐயாவைக் கூப்பிட்டு வரச் சொல்கிறார் அரசர்' என்று சொல்லிக்கொண்டு அரண்மனை சேவகன் வந்தான். அவன் கூறியது எதுவும் தியானத்தில் இருந்த அவர் காதில் விழவில்லை. அடுத்தாற்போல ஒர் அதிகாரியை அனுப்பி வைத்தான் அரசன். பின்பு அமைச்சர் ஓடிவந்தார். பட்டினத்தார் எழுந்திருக்கவில்லை. அவர் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. பிறகு அரசனே வந்துவிட்டான். அவர் பக்கத்தில் மெல்லச் சென்று நின்றான். அவருடைய தியானம் கலைந்த நேரத்தில், "தாங்கள் இந்தக் கோலம் கொண்டுவிட்டீர்களே இதில் என்ன லாபத்தைக் கண்டீர்கள்?' என்று கேட்டான். அவர் உடனே, "நாம் இருக்க, நீர் நிற்க' என்றாராம். அரசன் அவரிடம் கடனாகப் பொருளை வாங்கினாலும் அவர் அவனுக்குப் பணிந்து நின்றார் 73