பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 முன்பு. இப்போது அரசன் அருகில் நிற்க, அவர் எழாமல் கால் மேல் கால் போட்டுக்கொண்டு வீற்றிருந்தார். அவருக்கு உண்மையான பகுத்தறிவு இருந்தது. யார் கடவுளை நிச்சயமாக நம்புகிறானோ, யார் இன்ப துன்பத்திற்கு மூலகாரணம் உண்டென்று நம்புகிறானே அவன்தான் பகுத்தறிவாளி. பட்டினத் தடிகள் வாழ்க்கையில் எவ்விதத் தவறும் செய்யவில்லை. ஒரு முறை அவர்மேல் திருட்டுக்குற்றம் சாற்றித் தூக்கிலிடக் கொண்டு போனார்கள். துக்கு மேடைக்கு முன்னால் நின்றார். அவர் செய்யாத திருட்டுக்கு அவருக்குத் தண்டனை கொடுக்கத் தூக்கு மரம் நின்றது. தம் வாழ்க்கை ஏட்டைப் புரட்டிப் பார்த்தார். அந்தத் துன்பத்தை அநுபவிப்பதற்குரிய காரியம் எதையும் அவர் செய்ததாகத் தெரியவில்லை. தமக்குத் தெரியாத பழங் கணக்கில் இதற்குக் காரணமான வினை இருக்கவேண்டும் என்று தெளிந்தார். 'என்செய லாவது யாதொன்றும் இல்லை இனித்தெய்வமே உன்செய லேயென்று உணரப்பெற் றேன்இந்த ஊன்எடுத்த பின்செய்த தீவினை யாதொன்றும் இல்லை; பிறப்பதற்கு முன்செய்த தீவினை யேஇங்ங் னேவந்து மூண்டதுவே." 'இறைவனே! எனக்கென்று செயல் ஒன்று இருப்பதாக இப்போது எண்ணவில்லை. எல்லாம் உன் செயல் என்று உணர்கிறேன். இந்த உடம்பை எடுத்த பிற்பாடு நான் செய்த தீவினை ஒன்றும் இல்லையே. நான் முன் பிறவியில் செய்த தீவினை இப்படி வந்து மூண்டதுபோலும்' என்று பாடினார். உடனே தூக்குமரம் எரிந்துவிட்டது என்று கதை சொல்வார்கள். இன்பமும் துன்பமும் இன்பம் துன்பம் ஆகிய இரண்டு விளைவுகளும் இப் பொழுது செய்கின்ற காரியங்களின் பலன் அல்ல. முந்திய பிறவி களில் செய்திருக்கும் செயல்களின் பயன். அப்படி விளையும் இன்ப துன்பம் ஆகிய இரண்டு கரைகளுக்கும் உட்பட்டு வாழ்க்கை யென்றும் ஆறு செல்லும்போது இவ்விரண்டு கரை களையும் லட்சியம் செய்யாமல் இவற்றோடு மோதாமல் நேராகச் சென்றால் இறைவனாகிய கருணைக் கடலுடன் எளிதில் கலந்துவிடலாம். மிச்ர கர்மங்களின் பயனாக மனிதப் பிறவி வருகிறது. பாவத்தை மாத்திரம் செய்தவனாக இருந்தால் விலங்காகப் பிறப்பான். 74