பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 அன்று. காவிரிக்கு அடியார்களுடைய சம்பந்தம் அதிகம். காவிரி ஆற்றின் இரு மருங்கிலும் எங்கே பார்த்தாலும் தலங்கள். கங்கைக் கரையில் காசி முதலிய சில தலங்களே இருக்கின்றன. ஆனால் காவிரி பிறக்கும் இடம் முதற்கொண்டு கடலில் புகுகின்ற புகார் நகரம் வரையிலும் பல பல புண்ணிய தலங்கள் இருக்கின்றன. அந்தத் தலங்களுக்கு அடியார்கள் வருவார்கள். அவர்கள் நாள்தோறும் கும்பிடுவதனால் தலங்களுக்குப் பெருமை உண்டாகிறது. காவிரி நதியில் பல பல அடியார்களும், முனிவர் களும், சமயாசாரியர்களும் வந்து வந்து நீராடி இறைவனை வழிபட்டிருக்கிறார்கள். அந்நீரெடுத்துச் சென்று இறைவனுக்கு அபிஷேகம் செய்திருக்கிறார்கள். ஆண்டவன் சம்பந்தமும், அடியார்களின் சம்பந்தமும் எப்போதும் இருப்பதனால் காவிரி மிகவும் சிறப்புடையது. அந்தக் காவிரி பெருமித நடை போட்டுக் கொண்டு வருகிறது. காவிரியின் இயல்பு கரிக்கோட்டு முத்தைக் கொழித்தோடு காவிரி. கரிக்கோடு - யானையின் தந்தம். முதிர்ந்த யானைத் தந்தத்திலே முத்து விளையும் என்பார்கள். காவிரி நதி உற்பத்தி யாகின்ற மலைக் காடுகளில் யானைகள் பிறந்து வாழ்ந்து இறந்து படுகின்றன. அவற்றின் தந்தங்கள் இந்த ஆற்றிலே உருண்டு உருண்டு வருகின்றன. அதனால் அவை உடைந்து அவற்றில் இருக்கும் முத்துக்கள் அவ்வாற்றிலே சிதறுகின்றன. யானைத் தந்தத்திலே பிறக்கும் முத்துக்களைக் கொழித்து அரித்துக் கொண்டே காவிரி ஆறு போய்க்கொண்டிருக்கிறது. அம்முத்துக்களை அது சேமித்து வைப்பதில்லை. அப்பர் செய்தது அப்பர் சுவாமிகள் உலகத்து ஆசைகளைத் துறந்து உழவாரத் திருப்பணி செய்து கொண்டிருந்தார். அவருக்கு எந்தப் பொருளின் மேலும் ஆசை இல்லை என்பது இறைவனுக்குத் தெரியும். இருந் தாலும் உலகத்தாருக்குத் தெரிய வேண்டாமா? அதற்காக ஒரு பரீட்சை நடத்தினான். கல்லையும், முள்ளையும் செதுக்கி அடியார்கள் நடக்கும் பாதையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார் 78