பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் மறவேன் தெரியாமல் இருக்குமா? கள் குடித்த மயக்கம் போய்த் தெளிவு பிறந்தவுடன் இவைகள் எல்லாம் தெரிந்து விடுகின்றன. தேள் கொட்டுமென்று ஒருவனுக்குத் தெரியாது. அவன் விளை யாட்டாகக் கொடுக்கில் கை வைத்தான்; கொட்டிவிட்டது. மறு படியும் அவன் தேளைக் கண்டால் கை வைப்பானா? ஒன்றால் ஒருவன் துன்பத்தை அடைந்தால் மீட்டும் அதை நாட மாட்டான். ஒரு முறை கள்ளைக் குடித்துவிட்டு ஆடியவன் அதனால் தனக்கு உண்டான பழியையும், அவமானத்தையும் நன்றாக உணர்ந்த பின்பும், குடிக்கக் கூடாதென்ற சட்டம் இருந்தும், திருட்டுத் தனமாக மீண்டும் மீண்டும் குடிக்கிறான் என்றால் அதற்கு ஏதேனும் தக்க காரணம் இருக்க வேண்டும். மானம் மரியாதை பாவம் பழி ஆகியவற்றை எல்லாம் மிஞ்சுகிற இன்பம் அதில் இருக்கிறது. அந்த இன்பம் இல்லாவிட்டால் கள்ளை அவன் நாடமாட்டான். அதனிடம் அவன் பெறும்படியான இன்பம் ஏதோ ஒன்று இருக்கிறது. அந்த இன்பம் எது? தன்னை மறத்தல் கள்ளைக் குடித்தவன் தன்னை மறந்து பேசுகிறான்; தான் இன்ன இன்ன காரியங்கள் செய்ய வேண்டும். இன்னாரிடத்தில் இன்ன மாதிரியாகப் பேசவேண்டும் என்று முன்பு திட்டங்கள் போட்டிருந்தால், அந்தத் திட்டங்களை எல்லாம் மறந்த நிலையை அடைகிறான். தன்னை மறப்பது இன்பம். நன்றாகத் தூங்கினேன்' என்று ஒருவன் சொல்கிறான். தூங்கும்போது ஆசாபாசங்களை மறந்து, கவலையை மறந்து, கடமையை மறந்து கட்டை போலக் கிடப்பதால் இன்பத்தை அடைகிறான். கள்ளைக் குடிப்பவனும் கட்டுக்களை உடைத்து எறிந்து விட்டுக் கவலைகளை எல்லாம் மறந்து, தன்னையும் மறந்து விருப்பப்படி பேசுவதனால் இன்பத்தை அடைகிறான். கவலைகளை மறந்து, உலகத்திலுள்ள பற்றுக்களை விட்டு விட்டு நிற்பதுதான் இன்பம். ஞானிகள் அப்படி இருக்கிறார்கள். அவர்கள் கிணறு முழுவதையும் தாண்டியவர்கள். கள்ளைக் குடித்தவன் பாதிக் கிணற்றைத் தாண்டியவன். அதனால்தான் அதைக் குடித்திருக்கும் நேரத்தில் தன்னை மறந்து நின்றாலும் திரும்பத் தெளிவு ஏற்பட்டவுடன் அந்த இன்பம் போய்விடு 83