பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈயாதவர் படும் பாடு அருள் என்னும் செல்வத்தை அவன் படைத்திருக்கிறான். மனிதன் பிற உயிரைக் கண்டு இரங்கும் இரக்கம் ஆகிய அருள் அவன் படைத்திருக்கும் பெரிய பொருளைவிடச் சிறந்தது என்று பெரியவர்கள் சொல்வார்கள். 'அருட்செல்வம் செல்வத்துட் செல்வம்; பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள’ என்பது திருவள்ளுவர் வாக்கு. நம்முடைய சிறிய கருணையே பெரிய செல்வம். ஆனால் இறைவனுடையது பெரும் கருணை. அவன் எத்தனை பெரிய செல்வனாக இருக்க வேண்டும்! முருகனிடம் உள்ள செல்வம் அந்தச் செல்வம் உடையவனாகிய முருகப் பெருமான் அதை எப்போதும் தன்னிடத்தில் வைத்துக் கொள்ள வேண்டு மென்று விரும்பவில்லை. அதை யாருக்காவது கொடுக்க வேண்டுமென்றே ஒவ்வொரு கணமும் ஆசை கொண்டிருக் கிறான். அருள் என்னும் சுமையைச் சுமந்து கொண்டு அதனை எங்கே இறக்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறான். அந்த அருட் செல்வம் கொடுக்கக் கொடுக்கக் குறையாதது. அநாதி காலமாக எண்ணத் தொலையா ஆருயிர்களுக்கு அருளை வழங்கி வழங்கி வந்திருந்தாலும் இன்னும் அது வற்றாமல் இருக்கிறது. அது எப்போதும் வற்றாத சமுத்திரம். ஈதலின் வகை பொருள் உள்ளவன் அதைப் பிறருக்கு ஈவதில் பல வகை உண்டு. அடுத்து அடுத்துக் கேட்கும் ஒருவனுக்கு ஈவது ஒரு வகை. ஒரு முறை கொடுத்தால் இன்னொரு முறை கொடுக்கா திருப்பது மற்றொரு வகை. யார் குறை உடையவனோ அவன் நேரே சொல்லாமல் அவனுக்கு வேண்டியவர்கள் சொல்லப் பொருளைத் தருவது ஒரு வகை. அவனுக்கு இது வேண்டு மென்று தானாகவே உணர்ந்து கொண்டு வலிந்து கொடுப்பது ஒருவகை. இந்த நான்கு வகையிலும் மிகச் சிறந்த ஈகை, பிறருடைய துன்பத்தைக் குறிப்பால் அறிந்து தானே வலியச் சென்று ஈவதுதான். பலமுறை கேட்டுக் கொடுத்தால் அது அவன் 91