பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈயாதவர் படும் பாடு குழந்தையைத் தன் ஒக்கலில் எடுத்துக் கொள்வாள். தன் நிலை மறந்து தாழ்ந்திருந்த வள்ளியெம்பெருமாட்டியைத் தானே வலிய ஆட்கொள்ள வேண்டும் என்று எண்ணினான் முருகன். தன் னுடைய அருளை ஏழைகளிடத்தில் வலியச் சென்று கொடுப் பவன் அவன். அப்படியே வள்ளியிடம் தானே சென்றான். அந்தச் செயல் அவனிடத்தில் பெண் மயலால் உண்டாகவில்லை. அது கருணையினால் உண்டாகியது; அவனது பெரிய வள்ளன் மையைக் காட்டியது. இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட பரப் பிரம்மம் ஆகிய அவன் காமத்தால் துன்புற்றான் என்று சொல்வது முறையன்று. அவன் அருளை வழங்கும் முறை பல்வேறு விசித்திர வகையாக அமையும். அப்படி உள்ள வகைகளில் ஒன்று, வள்ளி யெம்பெருமாட்டியை நாடி, அவளிடம் காதல் கொண்டவனைப் போல நடித்து, அவளைத் தன்னிடத்தில் ஒன்றுபடுத்திக் கொண்ட திருவிளையாடல். அருளை வழங்கல் முருகன் தன் அருட் செல்வத்தை வேடிச்சியாக வளர்ந்த வள்ளியெம்பெருமாட்டியை நாடிச் சென்று வழங்கினான். அவன் ஈகையில் சிறந்தவன். அவன் கொடுத்த செல்வம் எல்லா வற்றிலும் சிறந்தது. மிகப் பெரிய செல்வத்தை, மிகப் பெரிய அருளோடு, மிகப் பெரிய ஈகையாக, மிகப் பெரியவனாகிய ஆண்டவன் வழங்கினான். அவனை நினைத்தால் நம்முடைய உள்ளம் கசியும். உள்ளத்தில் அவன் நினைப்பு அழுந்துவதற்குப் பலவகை யான சாதனங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று அவன் புகழைப் பாடுதல். தன்னை மறந்து வாழ்ந்திருந்த குறமகளைத் தடுத்தாட்கொள்வதற்காகத் தானே சென்று அருளை வழங்கிய முருகப் பெருமானைப் பாடவேண்டும். பாடினால் உள்ளம் கசியும். அப்படிக் கசிந்தால் தன்னிடம் உள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகும். முதலில் பொருளிலுள்ள பற்று அறவேண்டும். பின்பு பொருளைப் பிறருக்கு ஈயும் செயல் நிகழவேண்டும். வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை மெய்அன்பினால் பாடிக் கசிந்து - 93