பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 அன்பினால் பாடுதல் இறைவனைப் பாடுவதில் இரண்டுவகை உண்டு. பிறருடைய காது கேட்கப் பாடுவது, பிறர் மெச்சப் பாடுவது ஒரு வகை உள்ளன்பினால் பாடுவது மற்றொரு வகை. நாடகத்தில் யாக நடிக்கிறவன் டாக்டராக நடிக்கிறவனிடத்தில் நோயைத் தீர்க்க வேண்டுமென்று பரிதாபத்தோடு கெஞ்சுகிறான். உண்மை யாகவே நோய் பெற்ற ஒருவனும் உண்மை மருத்துவனிடத்தில் அப்படியே கெஞ்சுகிறான். தோற்றத்தில் இரண்டு செயல்களும் ஒன்றுபோல இருந்தாலும் உண்மையாகக் கெஞ்சுகிறவன் உண்மை யான நோயாளியே. உலக இயலில் இறைவனிடம் அன்பு செய் கிற வகையிலும்கூட இப்படிப் போலிகள் இருக்கிறார்கள். இறை வனை அவர்கள் பாடினவுடன் அவர்களுக்கு இன்பம் கிடைப்பது இல்லை. காரணம் அந்தப் பாட்டுக்கு மூலம் உண்மை அன்பாக இருப்பதில்லை. பாடினவுடன் நெஞ்சம் கசியவேண்டுமானால் உள்ளன் போடு பாடவேண்டும். நெஞ்சம் எங்கும் ஓடாமல் பாடினால் அந்தப் பாட்டு நெஞ்சிலே பதிந்து நிற்கும். நெடுநாள் பிரிந்திருந்த தாயைக் கண்டு குழந்தை அம்மா என்று ஒடுகிறது. அந்த அம்மா என்ற சொல்லுக்கு அகராதியில் உள்ள பொருள் பொருள் அன்று. மற்றவர்கள் நினைக்கிற பொருளும் அதற்கு இல்லை. பலகாலம் பிரிந்திருந்த உணர்ச்சியை எல்லாம் சேர்த்து வெளிப்படுத்தும் சொல் அது. அந்த உள்ளத்தில் இருக்கிற பெரிய பிரிவுத் துயரமே அதற்குப் பொருள். அப்படி இறைவனிடத்தில் முறுகிய அன்பு உடையவர்கள் அவனைப் பாடினால் அந்தப் பாட்டு வெறும் சொல்லாக மாத்திரம் இராது. இறைவனுடைய புகழாக மாத்திரம் இராது. அவன் உள்ளத்தின் தாபமே, உள்ளத்தில் தோன்றிய உணர்ச்சிப் பொங்கலே அவ்வாறு வெளிவரும்; அது உருக்கத் தோடு வரும். அதனால், - மெய்யன்பினால் பாடிக் கசிந்து என்று சொன்னார். உள்ள போதே மற்றொன்று சொல்கிறார். 'உள்ளபோதே கொடாதவர்' என்று சொல்கிறார். கொடுக்க வேண்டும் என்ற மனம் பலருக்கு 94