பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈயாதவர் படும் பாடு அணிவதில்லை. வயிறாரச் சாப்பிடுவதில்லை. அவற்றால் பொருள் குறைந்துவிடும் என்று எண்ணுவார்கள். போதிய அளவுக்கு உணவு கொள்ளாமையால் அவர்கள் உடல் நலியும். அவர்கள் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டித் தம்மைத்தாமே நலிந்து கொள்வார்கள். பொருள் நிலையாக நில்லாமல் போய்விடும். அதனால் செய்யும் அறம் கெடாது. இதனை அறிந்து பொருளைக் கொண்டு நல்ல அறங்களையும் செய்யமாட்டார்கள். யாருக்கும் கொடுக்காமல் இப்படி ஈட்டிய பொருளையெல்லாம் தாமே வைத்துக் கொண்டு பணங்காத்த பூதமாக இருப்பவர்கள் கடைசியில் அந்தப் பொருளை இழந்துவிடுவார்கள். இது உலக இயல்பு. இதற்கு உவமை வேண்டுமா? வானளவும் ஓங்கியிருக்கும் மலைநாடனே, உனக்குத் தெரிந்ததையே சொல்கிறேன். மலைச் சாரல்களில் தேனைக் கொண்டுவந்து பெரிய பெரிய தேனடைகளை வைக்கும் தேனிக்களே சாட்சி. அந்தத் தேனடைகளை மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். தேனீக்கள் தேனை இழப்பதோடு தம் உயிரையே இழந்துவிடு கின்றன" என்று பொருள் விரித்து உணரும்படி அமைந்திருக் கிறது அந்தப் பாட்டு. 'உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும் கெடாஅத நல்அறமும் செய்யார் - கொடா அது வைத்தீட்டி னார்இழப்பர்; வான்தோய் மலைநாட! உய்த்தீட்டும் தேனீக் கரி.” பெற்ற பொருளைக் கொடாமல் ஈட்டி வைத்து இழந்து ஏமாந்து வாடுபவர்கள் நிலை எவ்வளவு இரங்கத் தக்கது இப்படி வாழ்நாளை வீணாகச் செலவழித்துக் கடைசியில் மரணம் அடைகிறவர்களைப் பார்த்து, "ஐயோ பாவம் தாம் பெற்ற பொருளை உள்ளபோதே கொடுக்காதவர்கள் அல்லவா இப்படி வீணாக மரிக்கிறார்கள்?' என்று அருணகிரியார் இரக்கத் தால் பேசுகின்றார். ★ 1. உடாஅதும் - நல்ல உடையை உடுக்காமலும், செற்றும் வருத்தியும். ஈட்டினார் - பொருளைச் சேமித்தவர். உய்த்து - செலுத்தி, கொண்டுவந்து. கரி - சாட்சி. 99