பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை மெய்அன்பினால் பாடிக் கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தால் தேடிப் புதைத்துத் திருட்டில் கொடுத்துத் திகைத்திளைத்து வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே. (வேடர்குலப் பெண்ணாகிய வள்ளிநாயகியின் கொங்கையை விரும்பும் குமரனை, உண்மையான அன்பினால் புகழ்ந்து பாடி, நெஞ்சம் உருகி, தம் கையில் பொருள் இருக்கும்போதே அதை வறியவர்களுக்குக் கொடாதவர்கள், தாம் முற்பிறவியில் செய்த பாவத்தினால், பொருளைத் தேடி அதைப் பூமியில் புதைத்து வைத்துப் பின்பு அதை அவர்கள் அறியாமல் சிலர் கொள்ள, அதைத் திருட்டில் பறிகொடுத்துவிட்டு, அது காரணமாகச் செயலற்று உடம்பு இளைத்துப்போய் வாட்டமடைந்து துயருற்று, இப்படியே தம் வாழ்நாளை ஒரு பயனும் இன்றி வீணாக்கி அழிப்பவர்கள் ஆவார்கள். கொடாதவர்கள் மாய்ப்பவரே என்று கூட்டுக. கசிந்து - மனம் நெகிழ்ந்து. உள்ளபோதே - கையில் பிறருக்குக் கொடுப்பதற்குரிய பொருள் இருக்கும்போதே. கொடாதவர் - வறியவர் களுக்கு வழங்காதவர்கள். பாதகம் - தீங்கு; இங்கே தீய செயலால் விளைந்த பாவம். திகைத்து - மயங்கி; செயலிழந்து. கிலேசித்து - துயருற்று. வீணுக்கு வீணாக.) 1CC