பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் 4 பிறர் அடைகின்ற நன்மைகளைப் பார்த்து, அத்தகைய நன்மை எனக்குக் கிடைக்கவில்லையே என்று ஏங்கிச் சொல் பவரைப் போலச் சொல்கிறார் அருணகிரிநாதர். உலகில் பிறந்த எல்லோரும் செத்துப் போகிறார்கள்; பிறகு பிறக்கிறார்கள். இடைக்காலத்தில் பல தர்மங்களைச் செய்து அதனால் புண்ணியத்தை ஈட்டிக் கொள்கிறார்கள் சிலர் பிறப்பதற்கும் சாவதற்கும் இடை யிலுள்ள வாழ்வுக் காலத்தில் இந்தப் புண்ணியத்தை ஈட்டிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. பலர் அந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ளாமல் சாகிறார்கள். புண்ணியத்தை ஈட்டிக் கொள்வதற்காகத்தான் பிறப்பு, சாவதும் பிறப்பதுமாகிய செயல்கள் நம்மால் தவிர்க்க முடியாதவை. புண்ணியச் செயலோ நாம் விரும்பிச் செய்வது. புண்ணியம் என்னால் செய்ய முடியவில்லையே என்று அருணகிரியார் சொல்லவில்லை. சாவதும், பிறப்பது மாகிய இரண்டையும் நீ எப்படி எனக்கு விதித்தாயோ, அது போலவே ஈவதையும் விதிக்க வேண்டும். அதனை நீ எனக்கு விதிக்கவில்லையே” என்று சொல்கிறார். ஒற்றுமையும் வேற்றுமையும் எல்லோரும் பிறப்பதிலும் சாவதிலும் ஒரேமாதிரி இருந்தாலும், வாழ்க்கையில் இன்ப துன்பம் அநுபவிப்பதில் வெவ்வேறு வகை யில் இருக்கிறார்கள். பணம் பெற்றவர்கள் எல்லோரும் இன்பம் அடைகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆசை இருந்தாலும், எத்தனை பணம் இருந்தாலும், மன அமைதி பெறாமல் வாழ்கிற வர்கள் உண்டு. பணத்தைப் பெறுவதற்கு இறைவன் திருவருள் எப்படி அவசியமோ அப்படியே அதனை அநுபவிப்பதற்கும் இறைவன் திருவருள் அவர்களுக்கு வேண்டும். பணத்தை வைத் திருக்கிறவர்கள் எல்லோரும் பிறருக்குக் கொடுக்க முடியாது; தாமும் உண்ண முடியாது. அவரவர்களுடைய புண்ணிய பாவ வினைக்கு ஈடாக இந்த உலகத்தில் பிறந்து இன்ப துன்பங்களை அநுபவிக்கிறார்கள். அப்படி அதுபவிக்கும்போது, நம் போன்று மற்றவர்கள் அநுபவிக் காமல் இருக்கிறார்களே இதற்குக் காரணம் என்ன?’ என்று மனிதன் ஆராயவேண்டும். அப்போது, இந்த உலகத்தில் பிறந்த பிறகு நாம் ஒன்றும் செய்யாமல் இருக்க, நமக்குத் துன்பம் iO2