பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் ஈகையும் ஈகையின் வகை 'தளர்ந்தவர்களுக்கு வேண்டியதைக் கொடுக்கின்ற வகையில் என்னை வைக்கவில்லையே! என்று குறைபட்டுக் கொள்கிறார் அவர். “தளர்ந்தவர்களுக்குக் கொடுக்கும்படியா எனக்குப் பொருள் தரவில்லையே' என்று அவர் சொல்லவில்லை. பணத்தைப் கொடுப்பதுதான் ஈகை என்பது அன்று. யாரேனும் ஒருவர் தம் நண்பருடைய பெயரைச் சொல்லி அவருடைய விலாசம் எங்கே இருக்கிறதென்று கேட்கிறார். அந்த விலாசம் நமக்குத் தெரியும். அவருக்கு விலாசத்தைச் சொல்லி வழிகாட்டுவதும் ஒருவகை ஈகைதான்; கூடப் போக முடியாவிட்டாலும் இன்ன இடத்தில் இருக்கிறதென்று தெளிவாகச் சொல்வதும் ஈகை. உத்தியோகம் தேடி அலைகிற பல பேர்களுக்கு உத்தியோகம் கொடுக்கிறவர் களிடம் சிபாரிசு செய்வதும் ஒருவகை ஈகைதான். மிகச் சிறந்த வர்கள் தம் மனத்தினால் இவன் நன்றாக வாழ வேண்டுமென்று நினைத்தாலும் இன்பம் உண்டாகும். அந்த நினைவுகூட ஒரு வகையில் ஈகைதான். நிரம்பிய செல்வத்தை ஈட்டி வைத்துப் பிறகே மற்றவர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று நினைப்பது முறை யன்று. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் ஏதாவது ஒரு பொருள் உரிமையாக இருக்கிறது. ஒன்றும் இல்லாவிட்டாலும் கை கால்கள் இருக் கின்றன. அவற்றைக் கொண்டு பிறருக்கு உதவி செய்யலாம். ஆகவே, அறம் செய்வதற்குப் பொருள்தான் முக்கியமான கருவி என்பது இல்லை. பொருள் மிகுதியாக இருந்தால் அறத்தின் அளவு மிகுதியாகும். பலர் நலம் பெறுவார்கள். ஆனால் அறம் செய் வதற்கு மனந்தான் முக்கியம். கரப்பவர் பெறும் துன்பம் என்னிடம் இருந்தால் கொடுப்பேன் என்று சிலர் சொல்வது உண்டு. அது போலி வாதம். முன்னை நல்வினைப் பயன் காரண மாக வளப்பமான வாழ்வைக் கொடுத்து, பொருளையும் கொடுத்து, 'இரப்பவர்க்கு ஈவாயாக’ என்று ஆண்டவன் அனுப்பியிருக்க, அவன் திருவருளை உணர்ந்து கொள்ளாமல் பிறருக்குக் கொடுக் காமல் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் செல்வத்தைத் 107