பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 திருட்டிலே கொடுத்து, இளைத்து வாடி, கிலேசித்து, வாழ்நாளை வினுக்கு மாய்க்கிறார்கள் என்று முன்பு அருணகிரியார் சொன்னார். அத்தகையவர்களுக்கு இறைவன் மறுமையில் நரகங்களை வைத் திருக்கிறார். 'கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார் என்பது அப்பர் வாக்கு தம்மிடம் பிறர் வந்து இரக்கிற காலத்தில் உதவி செய்வதற்குப் பொருள் இருந்தாலும் கொடுப்பதற்கு அஞ்சி மறைத்துக் கொள்கிறார்களே, அவர்களுக்குக் கடுமை யான நரகத்தை ஆண்டவன் வைத்திருக்கிறானாம். நாமும் மக்கள் ஆகையால் பிறருக்கு எதனால் தளர்ச்சி உண் டாகும் என்பது நன்றாகத் தெரியும். பசியினால் மனிதன் துடிக்கும் போது அவன் தளர்ச்சி நமக்கு நன்றாகத் தெரிகிறது. தன்னுடைய தொழில் முயற்சியில் பொருள் இல்லாமல் திண்டாடும் போது அந்தத் திண்டாட்டத்திற்குப் பொருள் இல்லாத தளர்ச்சியே காரணம் என்பது நமக்குத் தெரியும். தளர்ச்சியைத் தெரிந்து கொள்ளாமல் இருந்தால் பொருளைக் கொடுக்கத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால் தளர்ச்சி இன்னாருக்கு உண்டென்பதை நன்றாகத் தெரிந்து கொண்டும் அவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்யாமல் இருக்கும் இயல்பு மிகக் கொடிது. உலகத்தில் தளர்ச்சியற்றவர்கள் மிகக் குறைவு. எங்கே பார்த்தாலும் தளர்ச்சியுள்ளவர்களையே காண்கிறோம். உடல் தளர்ச்சி, உள்ளத் தளர்ச்சி இவற்றினால் வாடுகிற மக்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். ஆகையால் தளர்ச்சி உள்ளவர்கள் யாரும் இல்லை என்று சொல்ல இயலாது. என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையே என்று சொல்வதும் முறையன்று. தளர்ச்சி உள்ளவர்களுக்குக் கொடுப்பதற்கு எனக்கு மனம் வரவில்லையே என்று சொல்லலாம். அப்படிச் சொல்வதுகூடப் பிழை. மனத்தில் அத்தகைய எண்ணத்தை இறைவன் திருவருள் உண்டாக்கவில்லையே என்று சொல்வதுதான்.உண்மை. அதை அருணகிரியார் சொன்னார். தளர்ந்தவர்க்கு ஒன்று ஈகைக்கு எனை விதித்தாய் இலையே 108