பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் ஈகையும் தம்முடைய அரசைப் பிறருக்குக் கொடுத்துவிட்டு வந்த பெருமான் அவர். யார் எதைக் கேட்டாலும் கொடுக்கிற வள்ளல். அவருடைய இயல்பான நிலை அது. எல்லாப் பொருளையும் உடைய சுவாமி அவர். அவரே உடையவர். நாமோ நம்மிடத் திலுள்ள பொருளைக் கேட்டால்தான் கொடுக்கமுடியும். நம்மிடத் தில் இல்லாத பொருள் ஒன்றைக் கேட்டால் இல்லை யென்று கை விரிப்போம். ஆனால் இறைவனுக்கோ எல்லாப் பொருளும் சொந்தமாக இருப்பதனால் எதனைக் கேட்டாலும் தருவான். அவனிடம் என்ன பொருள் இருக்கிறதென்று நமக்குத் தெரியாதே யொழிய அவன் எதைக் கேட்டாலும் தருவதற்குரிய ஆற்றல் உளளவனதான. எல்லாவற்றையும் பிறருக்குக் கொடுக்கும் அந்தக் கருணைக் கடலாகிய ராமபிரான் உப்புக் கடலின் வாசலில் வருணனைத் தெய்வமாக எண்ணி விதிமுறைப்படி வணங்கித் தோத்திரம் செய்து கொண்டு கிடந்தார். ஒருநாள் அல்ல; இரண்டு நாட்கள் அல்ல; ஏழு நாட்கள் திருப்புல்லணையில் தவம் கிடந்தார். இப்படிக் கிடக்க வேண்டிய நிலை தமக்கு வந்ததே என்ற நினைவு அவருக்கு அப்போது உண்டாயிற்று. “ஒன்றும் வேண்டில ராயினும் ஒருவர்பால் ஒருவர் சென்று வேண்டுவ ரேல்அவர் சிறுமையில் தீரார்.” 'எவரிடத்திலும் ஒன்றையும் வேண்டாத குறையற்ற பெரியவராக இருந்தாலும், பிறர் கேட்பதற்கு முன்பே எல்லாம் கொடுக்கும் திறன் உடையவராக எல்லாப் பொருளும் நிரம்பியவராக இருந் தாலும், அற்ப குணமுடையவரிடத்தில் காலத்தினாலும், இடத் தினாலும் இளைத்து ஏதேனும் உதவியை நாடிச் சென்றால், அவர்கள் தம் அற்ப குணத்தையே காட்டுவார்கள். நாம் இந்த வருணனின் உதவியை நாடி வந்தோம். நாம் இப்போது இளைப் புற்று இருக்கிறோம் என்று அவன் அலட்சியமாக இருக்கிறான். நமக்கு உதவி செய்யாமல் ஒளிந்து கொண்டிருக்கிறான்' என்று நினைத்தார் ராமபிரான். 1. தருணம் - இளம் பருவம். நெறி தருக என்னும் - வழியைக் காட்டு என்கிற. நூல் நெறி - சாத்திர விதிப்படி வருண மந்திரம் எண்ணினன் வணங்கிக் கிடந்தனன். 111